திருப்பதியில் ரூ.1,500 கோடி செலவில் மிகப் பெரிய தங்குவிடுதி

அலிபிரி மலையடிவாரத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் புதிய விடுதி கட்டப்பட உள்ளது.

திருப்பதியில் ரூ.1,500 கோடி செலவில் மிகப் பெரிய தங்குவிடுதி

1 mins read
10ff24dc-3c33-468c-870c-e3b675aec780
திருமலைக் கோயிலுக்கு 11 கிலோ மீட்டர் தூரத்தில் அலிபிரி அடிவாரம் உள்ளது. தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்கள் அதிகமாக அலிபிரி மலைப்பாதையிலேயே செல்கின்றனர். - படம்: டிரிப் அட்வைசர்

திருமலை: திருப்பதியில் பக்கதர்கள் தங்குவதற்கு வசதியாக ரூ.1,500 கோடி செலவில் புதிய தங்குமிடம் கட்டப்பட்டுள்ளது.

அலிபிரி மலையடிவாரப் பகுதியில் உள்ள தேவஸ்தான சிற்பக் கல்லூரி அருகே கிட்டத்தட்ட 25 ஏக்கர் நிலப்பரப்பில் ஒருங்கிணைந்த தங்குவிடுதியைக் கட்ட திருமலை அறங்காவலர் குழு முடிவுசெய்துள்ளது.

அடுத்த இரண்டு மாதங்களில் அதற்கான திட்ட வரைவைத் தயாரித்து அடிக்கல் நாட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏறக்குறைய 15,000 முதல் 20,000 பேர் வரை தங்கக்கூடிய அந்தத் தங்கு விடுதி, நடைப்பயணமாக வருவோர் எளிதில் சென்றடையும் வகையில் அமையும்.

பக்தர்களுக்கான தங்குமிடம், போக்குவரத்து வசதிகள், தரிசன முன்பதிவு, உடமைகள் வைக்கும் வசதி உள்ளிட்ட அதிநவீன வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருமலையில் ஏறத்தாழ 60,000 பேருக்கு மட்டுமே தங்கும் வசதி உள்ளது. அன்றாடம் மலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டுவதால் அனைவருக்கும் தங்குமிடம் வழங்குவது தேவஸ்தானத்திற்கு பெரும் சவாலாகவும், சுமையாகவும் உள்ளதால் இப்பிரச்சினைக்கு விரைந்து முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்