ஆறு மாதங்களில் 53 லட்சம் பாலியல் சுரண்டல் பதிவுகளை நீக்கிய மெட்டா

ஆறு மாதங்களில் 53 லட்சம் பாலியல் சுரண்டல் பதிவுகளை நீக்கிய மெட்டா

படம்: கம்யூட்டர் வோர்ல்ட்

08 Oct 2026 - 5:48 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஜனவரி - ஜூன்) மட்டும் சிறார் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான 53 லட்சம் படங்கள், காணொளிகள் நீக்கப்பட்டுள்ளன.

‘மெட்டா’ நிறுவனத்துக்குச் சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம் தளங்களில் வெளியான இதுபோன்ற சட்டவிரோதப் பதிவுகளில், 98 விழுக்காட்டுக்கும் அதிகமானவற்றைப் பயனாளர்கள் புகார் அளிப்பதற்கு முன்பாகவே அதிநவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ‘மெட்டா’ கண்டறிந்து நீக்கியுள்ளது.

உலக அளவில் இதே காலகட்டத்தில் 3.32 கோடி பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இன்ஸ்டகிராமில் வெளியான சில பாலியல் சுரண்டல் விளம்பரங்கள் குறித்து விளக்கம் கேட்டு இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சு கடந்த ஜூலை மாதம் மெட்டாவுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

இதைத் தொடர்ந்து, இந்திய இணையவழிக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்துடன் இணைந்து பாதுகாப்பு தொடர்பான புகார்களைக் கையாள மெட்டா சம்மதித்தது.

இந்நிலையில், குற்றவாளிகள் தங்களின் உத்திகளை மாற்றியுள்ளதாக மெட்டா சுட்டிக்காட்டியுள்ளது.

சாதாரணமாகத் தோன்றும் விளம்பரங்கள் மூலம் பயனாளர்களை ஃபேஸ்புக், இன்ஸ்டகிராமில் இருந்து பிற வெளிப்புற சட்டவிரோத இணையத்தளங்களுக்கு திசைதிருப்பும் தந்திரத்தை அவர்கள் கையாளுகின்றனர்.

இந்த முறையைக் கண்டறிந்த மெட்டா, குறிப்பிட்ட விளம்பரங்களை மட்டுமின்றி, அதற்குப் பின்னணியில் இயங்கிய கணக்குகள், வெளிப்புற இணைப்புகளையும் முடக்கி தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்
மெட்டாபாலியல்பதிவுஇன்ஸ்டகிராம்இணையக் குற்றம்ஃபேஸ்புக்