ஹைதராபாத்தில் புதிய ஆப்பிள் விற்பனை நிலையம்

ஹைதராபாத்தில் புதிய ஆப்பிள் விற்பனை நிலையம்

படம்: ராய்ட்டர்ஸ்

27 Nov 2026 - 8:56 am

1 mins read

நியூயார்க்: இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஆப்பிள் நிறுவனம் டிசம்பர் மாதம் தனது புதிய விற்பனை நிலையத்தைத் திறக்கிறது. வேகமாக வளர்ந்துவரும் வெளிநாட்டுச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் தனது சில்லறை விற்பனைக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் முயற்சியாக, தென்னிந்திய நகரமான ஹைதராபாத்தில் ஆப்பிள் நிறுவனம் இந்நிலையத்தைத் திறக்கிறது.

இப்புதிய நிலையம், உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ விற்பனை நிலையங்களின் மொத்த எண்ணிக்கையை ஏழாக உயர்த்தும். இது டிசம்பர் 10ஆம் தேதி திறக்கப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான ஹைதராபாத்தில், ஆப்பிள் நிறுவனத்தின் ஆய்வு, மேம்பாட்டுப் பிரிவுகளும் சில்லறை வாடிக்கையாளர் பராமரிப்புக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.

பல ஆண்டுகளாக இந்தியாவின் உள்ளூர் கொள்முதல் விதிமுறைகள் காரணமாக ஆப்பிள் நிறுவனத்தால் தனது புகழ்பெற்ற விற்பனை நிலையங்களை அங்குத் திறக்க முடியவில்லை.

கொள்கை தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, 2020ஆம் ஆண்டில் இந்தியாவில் தனது இணையவழி விற்பனை நிலையத்தை ஆப்பிள் இறுதியாகத் தொடங்கியது.

மூன்றாண்டுகளுக்குப் பிறகு, அப்போதைய தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக் மும்பையிலும் புதுடெல்லியிலும் நாட்டின் முதல் இரண்டு நேரடி விற்பனை நிலையங்களைத் திறந்துவைத்தார்.

அதன்பின் அந்நிறுவனம் தனது சில்லறை விற்பனைக் கட்டமைப்பை வலுப்படுத்தியதுடன் கூடுதல் விற்பனையாளர்களையும் சேர்த்துள்ளது.

சந்தையில் விலை குறைந்த ஆண்ட்ராய்டு சாதனங்கள் ஆதிக்கம் செலுத்தினாலும், அதிகரித்துவரும் உற்பத்தி, சில்லறை விற்பனை மூலம் வசதி படைத்த இந்திய நுகர்வோரை ஆப்பிள் கவர்ந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்