புதுடெல்லி: 65 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்க சட்டத்தை ரத்து செய்து, புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
புதிய சட்டம், தற்போதைய நாடாளுமன்ற (தகுதி நீக்கம் தடுப்பு) சட்டம் 1959இன் பிரிவு 3ஐ ஒழுங்குபடுத்துவதையும் தகுதியிழப்புக்கு வழிவகுக்கும் அட்டவணையில் உள்ள பதவிகளின் எதிர்மறை பட்டியலை அகற்றுவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும், இந்த முன்மொழிவு, தற்போதைய சட்டம் மற்றும் தகுதியின்மையிலிருந்து விலக்குகளை வெளிப்படையாக வழங்கும் பிற சட்டங்களுக்கு இடையே உள்ள முரண்பாடுகளை களைய முற்படுகிறது.

