இந்தியத் தலைமை நீதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

இந்தியத் தலைமை நீதிபதிக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

படம்: தி ஹிந்து

13 Oct 2026 - 4:58 pm

2 mins read

புதுடெல்லி: வாக்காளர் பட்டியலில் முறைகேடு, வாக்குக் களவாடல் குற்றச்சாட்டுகள் குறித்து நேரில் முறையிட நேரம் கோரிய இண்டியா கூட்டணித் தலைவர்களைச் சந்திக்க, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மறுத்துவிட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

சிவசேனா (யுபிடி) எம்.பி. சஞ்சய் ராவத், திமுக முன்னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் தலைமை நீதிபதியை விமர்சித்துள்ளனர்.

அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் தலைமை நீதிபதி தங்களைச் சந்திக்க மறுப்பது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும், இந்த முடிவை மக்கள் நினைவில் வைத்திருப்பார்கள் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுகுறித்து சிவசேனா (யுபிடி) எம்.பி. சஞ்​சய் ராவத் கூறுகையில், வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் தீவிர திருத்​தம், வாக்​குக் களவாடல் குறித்​துத் தலைமை நீதிப​தி​யிடம் முறை​யிட அனு​மதி கோரிய நிலையில், அரசி​யலமைப்​பைப் பாது​காக்க வேண்​டிய பொறுப்​பில் இருக்​கும் தலைமை நீதிபதி தங்களைச் சந்​திக்க விரும்​ப​வில்​லை என்றார்.

வாக்குத் திருட்​டு, தேர்​தல் முறை​கேடு, லட்சக்​கணக்​கான வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டதன் மூலம் ஜனநாயகத்​திற்கே ஆபத்து ஏற்​பட்​டுள்​ளதாகவும் அவர் தெரிவித்தார்.

“நாங்​கள் திட்​ட​மிட்​டபடி போராட்​டத்தை முன்​னெடுப்​போம். கட்​சியின் தலைமை என்ன வழி​காட்​டு​தல் வழங்​கு​கிறதோ, அதை அனை​வரும் பின்​பற்​று​வார்​கள்,” என்று காங்​கிரஸ் எம்.பி. இம்​ரான் மசூத் கூறியுள்ளார்.

தி.​மு.க முன்​னாள் எம்.பி. டி.கே.எஸ். இளங்​கோவன் கூறுகை​யில், “தலைமை நீதிப​திக்கு என்ன மாதிரி அழுத்​தம் இருக்​கிறது எனத் தெரிய​வில்​லை. நாங்​கள் அளிப்​பது ஜனநாயகத்​தைப் பாதுகாப்பதற்​கான மனு. தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பாஜக​வுக்கு ஆதர​வாகச் செயல்​படு​கிறார். தேர்​தல் ஆணை​யம் நடுநிலை​யோடு செயல்​பட்​டால்​தான் ஜனநாயகம் தழைக்​கும்,” என்​றார்​.

குறிப்புச் சொற்கள்
இண்டியாகூட்டணிஎஸ்ஐஆர்போராட்டம்உச்ச நீதிமன்றம்சு.வெங்கடேசன்நாடாளுமன்ற உறுப்பினர்வாக்காளர்தலைமை நீதிபதி