ஜெய்ப்பூர்: மாநில முதல்வரின் கூடுதல் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட 62 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது.
முதல்வரின் தலைமைச் செயலாளராக வி.சீனிவாஸ் அண்மையில் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதற்குப் பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழில்கள், நிதி, போக்குவரத்து, மருத்துவம், சுற்றுலா, வருவாய், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு உள்ளிட்ட 18 துறைகளில் கூடுதல் தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்கள் மற்றும் செயலாளர் நிலை அதிகாரிகள் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வழக்கமான ஒன்றுதான் என்றும் நிர்வாக மேம்பாடு மற்றும் சிறந்த ஒருங்கிணைப்பை உறுதிசெய்வதற்காக இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்றும் ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.

