இமயமலை அழகை ரசிக்க 1,400 அடி உயரத்தில் சுழலும் உணவகம்

1 mins read
7e48bf4b-c8d0-42a2-b8c3-9d0fb98aaff3
மேகக் கூட்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள சுழலும் உணவகம். - படம்: என்டிடிவி

பாராமுல்லா: ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுப் பயணிகளை ஈர்க்கும் வகையில் அங்கு சுழலும் உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள குல்மார்க் பகுதியில் 14,000 அடி உயரம் கொண்ட அஃபர்வத் சிகரத்தில் திறக்கப்பட்டுள்ள அந்த உணவகம் ஒரு புதுமையான அனுபவத்தை அளிக்கும்.

பனி படர்ந்த மலைகளுக்கு நடுவே காஷ்மீர் பாரம்பரிய உணவுகளை ருசித்தபடி, இமயமலையின் அழகை அந்தச் சுழலும் உணவகத்தில் அமர்ந்தபடி ரசிக்கலாம்.

பனிச் சறுக்கு ஆர்வலர்களை ஈர்க்க மின்தூக்கி வசதியும் அமைக்கப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

பயணிகளைக் கவர குல்மார்க்கில் கோண்டோலா (கேபிள் கார்), பனிச் சறுக்கு உள்ளிட்ட பல பொழுதுபோக்கு அம்சங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்