இருநாள் பயணமாக இந்தியா செல்லும் ரஷ்ய அதிபர் புட்டின்

1 mins read
f6379b0d-c060-4c0f-bc5b-515ede1a16d3
இவ்வாண்டு செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு உச்ச மாநாட்டில் சந்தித்துக் கொண்ட இந்தியப் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புட்டின். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் டிசம்பர் 4, 5 தேதிகளில் இந்தியா செல்லவிருக்கிறார்.

ரஷ்யா-உக்ரேன் போர், இந்தியாவின் ஆப்பரேஷன் சிந்தூர் தொடங்கிய பிறகு அவர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது.

குறிப்பாக புதிய எஸ்-100 விமானத் தற்காப்பு ஒப்பந்தம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் கலந்து ஆலோசிப்பார்கள் எனத் தெரிகிறது.

இரு தலைவர்களின் உச்சநிலைக் கூட்டத்தில் பல தற்காப்புத் திட்டங்களுக்கான புதிய புதுப்பிக்கப்பட்ட ஒத்துழைப்பு குறித்து ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முக்கியமாக இந்திய விமானப் படைக்கு கூடுதலாக இரண்டு முதல் மூன்று எஸ்-400 படைப் பிரிவுகளை ரஷ்யா வழங்குவதும் அடங்கும்.

கடந்த பத்தாண்டுகளில் ரஷ்யாவிலிருந்து ஆயுத இறக்குமதியின் பங்கு வெகுவாகக் குறைந்த போதிலும் இந்தியாவின் ரஷ்ய ராணுவ ஆயுதங்களைச் சார்ந்திருக்கும் நிலை அதிகமாகவே உள்ளது. இந்தியாவின் ஆயுதக் கிடங்கில் 60-70 விழுக்காடு ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து வருகிறது.

குறிப்புச் சொற்கள்