புதுடெல்லி: எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்த நடவடிக்கை தொடர்பாக நாடு முழுவதும் நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. மேலும், உச்ச நீதிமன்றத்தையும் சில தரப்பினர் அணுகியுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்குகள் வரும் 17ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளன. தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு விசாரணையை செவிமெடுத்து தீர்ப்பு வழங்க உள்ளது.
இந்நிலையில், எஸ்ஐஆர் தொடர்பாக இனிமேல் புதிதாக எந்த வழக்கும் விசாரணைக்கு ஏற்கப்பட மாட்டாது என்றும் தலைமை நீதிபதி அமர்வு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் எஸ்ஐஆர் தொடர்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எனினும் இது தொடர்பாக பீகாரில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைதான் முதலில் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது.
அந்த வழக்குகள் தொடர்பான தீர்ப்பு பிற மாநிலங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

