பிரபல இந்தியப் பாடல்களை அகற்றும் ஸ்பாட்டிஃபை

1 mins read
d6f1b490-1d63-4b80-930a-c25bd35cbd6f
படம்: பிக்ஸாபே -

ஆயிரக்கணக்கான பாடல்களைக் கொண்டுள்ள ஸ்பாட்டிஃபை செயலியில் தற்போது பிரபலமான இந்தியப் பாடல்கள் அகற்றப்பட்டுள்ளன.

'ஜி மியூஸிக்' நிறுவனத்துடன் பாடல்கள் உரிமத்திற்கான ஒப்பந்தம் தோல்வியில் முடிந்ததால் ஸ்பாட்டிஃபை செயலியில் இருந்து பாடல்கள் அகற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிடித்த பாடல்கள் இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் பலர் சமூக ஊடகங்கள்வழி அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

சிலர் செயலியை அகற்றப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

பாடல்களுக்கான உரிம ஒப்பந்தம் குறித்து இரு நிறுவனங்களும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கட்டணம் செலுத்தி பயன்படுத்தக்கூடிய சந்தா முறையைக் கொண்டது ஸ்பாட்டிஃபை.

பிடித்த பாடல்கள் இல்லாமல் போனால் வாடிக்கையாளர்கள் அதில் இருந்து விலகக்கூடும். அதனால் வணிகரீதியாக ஸ்பாட்டிஃபை பெரும் சிக்கலை எதிர்நோக்கக்கூடும்.

குறிப்புச் சொற்கள்