தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வீட்டில் தனியே இருந்த கல்லூரிப் பேராசிரியை படுகொலை

1 mins read

தி.மலை: வீட்டில் தனியே இருக்கும் பெண்களைக் கொலை செய்து கொள்ளையடிக்கும் சம்ப வம் தமிழகத்தில் அதிகரித்து வருவதாகத் தெரிகிறது. இந்த வகையில் திருவண்ணாமலையில் வீட்டில் தனியே இருந்த கல்லூரிப் பேராசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். திண்டிவனம் சாலையில் நாவக்கரை பகுதியைச் சேர்ந்த 50 வயதான கிருஷ்ணவேணி, அங் குள்ள அரசுக் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாகப் பணி யாற்றி வந்தார். இவரது கணவர் விமல்ராஜ். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, கடந்த 6 மாதங்க ளாகப் பிரிந்து வாழ்கின்றனர். இத்தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கிருஷ்ணவேணியின் உறவினர் ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு சுமார் ஏழு மணியளவில் அவரைத் தொடர்புகொள்ள முயன்றார். நீண்ட நேரமாகியும் கைபேசி அழைப்பை அவர் ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த உறவினர் உடனடியாக அன்றிரவே கிருஷ்ணவேணி வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, தலை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் கிருஷ்ண வேணி இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். கிருஷ்ண வேணியின் நகைகளைக் காண வில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.