தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மர்மமாக மடிந்த மயில்கள்

1 mins read
72ef28e3-c4dd-4ea4-a4f4-1d9d68118a0a
-

ஓமலூர்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே திண்டமங்கலம் காட்டுப் பகுதியில் கடந்த இரு நாட்களாக மயில்கள் மர்ம மான முறையில் மடிந்து வருகின்றன. இதுவரை ஐந்து மயில் கள் மாண்டதைக் கண்ட அப்பகுதி மக்கள் கால்நடை மருத் துவர்களிடம் அவற்றை எடுத்துச் சென்றனர். உயிரிழந்த மயில்களைப் பரிசோதித்த மருத்துவர்கள் நச்சு கலந்த உணவைச் சாப்பிட்டதால் அவை மாண்டதாகத் தெரிவித் தனர். இதையடுத்து அங்குள்ள வயல்வெளிப் பகுதிகளில் ஆய்வு செய்தபோது வயல்வெளிகளில், பல இடங்களில் தானியங்களில் விஷம் கலந்து தூவியிருப்பது தெரிய வந்து உள்ளது. இது குறித்து தொளசம்பட்டி போலிசாரிடமும் வனத்துறையினரிடமும் அப்பகுதியினர் புகார் செய்துள்ளனர்.

நச்சு கலந்த உணவைத் தின்றதால் மயில்கள் மாண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். படம்: தமிழக ஊடகம்