புடவை சரியில்லை என புகார் சொன்ன மாப்பிள்ளை; நின்றுபோன திருமணம்

1 mins read
2b46079e-b7ef-463f-a3e3-beda8e91d4c4
பெரும்பாலும் ஜொலிக்கும் திருமணப் புடவைகளைத் தேர்ந்தெடுப்பதில் பெண்கள்தான் அதிக அக்கறை காட்டுவார்கள். படம்: தமிழக ஊடகம் -

புடவை சரியில்லை என்று கூறி ஒரு திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்துப் போலிசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ஹசன் நகருக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர் ரகுகுமார். இவர், சங்கீதா என்ற பெண்ணைக் காதலித்து வந்தார்.

இருவரது குடும்பத்தாரும் சம்மதிக்கவே திருமணம் நிச்சயமானது. திருமணத்தன்று நடைபெற்ற சடங்குகளில் மணமக்கள் பங்கேற்றனர்.

அப்போது மணமகள் சங்கீதா அணிந்திருந்த புடவை சரியில்லை என்று மணமகனின் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

மேலும் வேறு புடவையைக் கட்டிக் கொள்ளும்படி சங்கீதாவிடம் கூறியுள்ளனர்.

ஆனால், மணமகள் தான் மிகவும் விரும்பி வாங்கிய புடவையை மாற்ற மறுத்துள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த மணமகனின் பெற்றோர் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

மணமகன் ரகுகுமாரும் பெற்றோரின் பேச்சைக் கேட்டு அவர்களுடன் அமைதியாகத் திருமண மண்டபத்தை விட்டு வெளியேறினார்.

இதையடுத்து சங்கீதாவின் பெற்றோர் போலிசில் புகாரளித்தனர். அதன்பேரில் ரகுகுமார் மீது மோசடி வழக்கு பதிவாகியுள்ளது. இதனால் அவர் தலைமறைவாகி உள்ளார்.

#தமிழ்முரசு #புடவை #திருமணம்

குறிப்புச் சொற்கள்