தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'நான் வகுத்த வியூகத்தின்படி திரிணாமூல் வென்றது'

1 mins read
eaf5fe68-fc98-4a2b-8b60-8626f57dc159
-

புது­டெல்லி: தேர்­தல் வியூக நிபு­ணர் பிர­ஷாந்த் கிஷோர், மேற்கு வங்­கத்­தில் பார­திய ஜனதா கட்சி இரட்டை இலக்­கத்­தில் வெற்றி பெறு­வ­தற்கு தடு­மா­றும் நிலை ஏற்­படும் என்று கடந்த டிசம்­ப­ரில் கூறி­யி­ருந்­தார்.

பாஜக மேற்கு வங்­கத்­தில் வெற்­றி­பெற்றுவிட்­டால் தான் டுவிட்­ட­ரில் இருந்து வில­கிக்­கொள்­கி­றேன் என்று சவால்­விட்­டி­ருந்­தார். அவர் கூறி­ய­ப­டியே நடந்­து­முடிந்த தேர்­த­லில் பாஜக இரட்டை இலக்க வெற்­றி­யையே பெற்­றுள்­ளது.

திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் கட்­சிக்கு தான் வகுத்­துக் கொடுத்­தி­ருந்த வியூ­கம் வெற்­றி­பெற்று விட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார்.

நான் நினைத்­த­தைச் சாதித்­து­விட்­ட­தா­கக் கூறி­யுள்­ளார். இனி நான் இந்தப் பணியைத் தொடரப் போவதில்லை. தேர்தல் வெற்றி வியூகம் வகுக்கும் பணிகளில் நான் போதுமானவரை செய்து சாதித்துவிட்டேன்.

இனி தான் இதில் இருந்து ஓய்வுபெற்று வேறு பணிகளில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.