புதுடெல்லி: தேர்தல் வியூக நிபுணர் பிரஷாந்த் கிஷோர், மேற்கு வங்கத்தில் பாரதிய ஜனதா கட்சி இரட்டை இலக்கத்தில் வெற்றி பெறுவதற்கு தடுமாறும் நிலை ஏற்படும் என்று கடந்த டிசம்பரில் கூறியிருந்தார்.
பாஜக மேற்கு வங்கத்தில் வெற்றிபெற்றுவிட்டால் தான் டுவிட்டரில் இருந்து விலகிக்கொள்கிறேன் என்று சவால்விட்டிருந்தார். அவர் கூறியபடியே நடந்துமுடிந்த தேர்தலில் பாஜக இரட்டை இலக்க வெற்றியையே பெற்றுள்ளது.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு தான் வகுத்துக் கொடுத்திருந்த வியூகம் வெற்றிபெற்று விட்டதாகக் கூறியுள்ளார்.
நான் நினைத்ததைச் சாதித்துவிட்டதாகக் கூறியுள்ளார். இனி நான் இந்தப் பணியைத் தொடரப் போவதில்லை. தேர்தல் வெற்றி வியூகம் வகுக்கும் பணிகளில் நான் போதுமானவரை செய்து சாதித்துவிட்டேன்.
இனி தான் இதில் இருந்து ஓய்வுபெற்று வேறு பணிகளில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.