தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குரங்கு சேட்டை: மரத்திலிருந்து பணம் கொட்டியது

1 mins read
3bfe477f-8717-4a20-98af-fbe2de8d3c1f
-

ரேப­ரேலி: உத்­த­ரப் பிர­தேச மாநி­லத்­தின் ரேப­ரேலியைச் சேர்ந்­த­ வழக்கறிஞர் வினோத் குமார் சர்மா, ஷகா­பாத் என்னும் நக­ரில் உள்ள பத்­தி­ரப்­ப­திவு அலு­வ­ல­கத்­திற்கு ரூ.2 லட்­சம் ரொக்­கப் பணம் அடங்­கிய கைப்­பை­யுடன் சென்­று­கொண்­டி­ருந்­தார். அப்­போது அவரை நெருங்­கிய குரங்கு ஒன்று அவ­ரி­ட­மி­ருந்து பையைப் பறித்­துச் சென்று அரு­கி­லி­ருந்து மரத்­தின் மீது வேக­மாக ஏறி உட்­கார்ந்து கொண்­டது. பத­றிப்­போன வினோத் குமார், பணத்­தைத் தந்­து­வி­டு­மாறு குரங்கை நோக்­கிக் கெஞ்­சத் தொடங்­கி­னார்.

இருப்­பி­னும் 50,000 பணக்­கட்­டு­கள் இரண்டை கையில் எடுத்­துக்­கொண்டு மீதிப் பணம் 1 லட்­சம் ரூபாயுடன் பையை கீழே போட்­டது. அதற்குள் அங்கு கூட்­டம் கூடி­விட்­டது. கையி­லி­ருக்­கும் பணத்­தை­யும் கீழே போட குரங்கை உற்­சா­கப்­ப­டுத்­தும் வகை­யில் அத்­தனை பேரும் சேர்ந்து கைதட்­டி­னர். அத­னைக் கண்ட குரங்கு, இரு பணக்­கட்­டு­க­ளை­யும் பிரித்து ரொக்க நோட்­டு­களை மரத்­தி­லி­ருந்து வீசத் தொடங்­கி­யது.

கூட்­டத்­தி­லி­ருந்­த­வர்­கள் மகிழ்ச்­சி­யு­டன் பணத்தை ஓடி ஓடி எடுத்­த­னர். சிலர் வினோத் குமா­ரி­டம் கொடுத்­த­னர். வேறு சிலர் தங்­க­ளது பையில் வைத்­துக் கொண்டு நழு­வி­னர். "அது என் பணம், கொடுத்­து­வி­டுங்­கள்," என்று அவர் இப்­போது மக்­க­ளைப் பார்த்­துக் கெஞ்­சத் தொடங்­கி­னார். இறு­தி­யில் ரூ.5,000 குறைந்தது. கிைடத்த வரை லாபம் என்று அவர் நிம்­ம­தி­ய­டைந்­த­தாக 'டைம்ஸ் ஆஃப் இந்­தியா' தெரி­வித்­துள்­ளது.