புவனேஸ்வர்: இயற்கையின் படைப்பில் சில புதுமையாகவும் நம்பமுடியாத வகையிலும் அமைந்துவிடுவதுண்டு.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் அண்மையில் பிறந்த கன்று, அதற்கோர் எடுத்துக்காட்டு.
நவ்ங்பூர் மாவட்டத்தில் பிறந்த அக்கன்றுக்கு இரண்டு தலைகளும் மூன்று கண்களும் உள்ளன.
நவராத்திரி நாளின்போது பிறந்ததால் அந்தக் கன்றை துர்க்கையின் வடிவமாகக் கருதி மக்கள் வழிபடத் தொடங்கிவிட்டனர். அதிலும், கன்றைத் தெற்குமுகமாக நிற்கவைத்து அதனை வழிபடுகின்றனர்.
தனிராம் என்ற உழவர் ஈராண்டுகளுக்குமுன் ஒரு பசுவை விலைக்கு வாங்கிவந்த பசு, சில மாதங்களுக்குமுன் கருத்தரித்தது.
இந்நிலையில், அண்மையில் மிகவும் சிரமப்பட்டு இப்படியொரு கன்றை ஈன்றெடுத்தது அப்பசு.
"தாய்ப்பசுவிடம் பால் குடிக்க கன்று சிரமப்படுகிறது. அதனால், வெளியிலிருந்து பால் வாங்கி அதற்குக் கொடுத்து வருகிறோம்," என்றார் தனிராம்.