குஜராத்: சூர்யா நடித்த 'அயன்' படத்தில் ஹெராயினை பிள்ளையார் சிலையில் ஊறவைத்து கடத்தல் செய்வதுபோன்ற காட்சி இடம்பெற்றிருந்தது. அதுபோல நூலை
ஹெராயின் கரைசலில் கரைத்து உலர வைத்து கடத்த முயன்ற
முயற்சியை குஜராத் தீவிரவாத தடுப்புப் படை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தி இருக்கிறது.
ஈரானில் இருந்து பிபாவாவ் துறைமுகத்திற்கு ஐந்து மாதங்
களுக்கு முன்பு வந்த கப்பலில் இருந்த கொள்கலன்களில் சந்தேகத்திற்கு இடமான நான்கு பைகளில் சுமார் 395 கிலோ எடையுள்ள நூல்கள் இருந்ததை தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் ஹெராயின் என்கிற போதைப் பொருள் இருந்தது தெரியவந்தது.
அந்த நூல்களில் இருந்து ரூ.450 கோடி மதிப்புள்ள கிட்டத்தட்ட 90 கிலோ ஹெராயின் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த கடத்தல் சம்பவத்தை அதிகாரிகள் கண்டுபிடிக்காமல் இருப்பதற்காக, ஹெராயின் உள்ள கரைசலில் நூல்களை ஊறவைத்து, பின்னர் உலர்த்தப்பட்டு நூல் கண்டு
களாக உருவாக்கி சாதாரண நூல் கட்டுகளைக்கொண்ட மற்ற நூல் கண்டுகளுடன் கலந்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக போதைப் பொருள் தடுப்புச் சட்டம் 1985ன் விதிகளின் கீழ் 'டிஆர்ஐ' மூலம் ஆய்வு மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள் நடந்து வருவதாக குஜராத் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆஷிஷ் பாட்டியா தெரிவித்துள்ளார்.
குஜராத் தீவிரவாத தடுப்புப் படை மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் இணைந்து நடத்திய இந்தக் கூட்டு நடவடிக்கையில் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டதை பிரதமர் மோடியும் அரசியல் அதிகாரிகளும் பாராட்டினர்.

