கள்ள நோட்டுகளுடன் இருவர் கைது

கள்ள நோட்டுகளுடன் இருவர் கைது

10 Dec 2022 - 5:30 am

1 mins read

புது­டெல்லி: புது­டெல்­லி­யின் ஆனந்த் விகார் ரயில் நிலை­யத்­தில் 500 ரூபாய் கள்ள நோட்­டு­களை சிறப்­புக் காவல்­ப­டை­யி­னர் கைப்­பற்­றி­யுள்­ள­னர். இவற்­றின் மொத்த மதிப்பு 1,97,500 ரூபாய்.

கள்ள நோட்­டு­களை வைத்­தி­ருந்த மாபியா கதூன் எனும் 35 வய­துப் பெண்­ணும் முனிஷ் அக­மது எனும் 57 வயது ஆட­வ­ரும் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

இரு­வ­ரும் இந்­தி­யா­வில் மிகப் பெரிய அள­வில் கள்ள நோட்டு விநி­யோ­கத்­தில் ஈடு­பட்­டு­வந்த அனைத்­து­ல­கக் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும் ரக­சி­யத் தக­வ­லின் அடிப்­ப­டை­யில் அவர்­கள் நட­மாட்­டத்தை அறிந்து கைது செய்­த­தா­க­வும் காவல்­துறை தெரி­வித்­தது.

இரு­வ­ரும் கடந்த சில ஆண்­டு­களில் 40 லட்­சம் ரூபாய் மதிப்­புள்ள கள்ள நோட்­டு­களை புழக்­கத்­தில்­விட உத­வி­யது விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்துள்­ளது.