தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'இந்தியா முழுவதும் வெப்ப அலை ஓய்ந்தது'

1 mins read
a75122c8-802e-45dd-96f7-ef2bd84851ec
-

புது­டெல்லி: இந்­தி­யா­வில் வெப்­பம் மே மாதத்­தில் புதிய உச்­சத்­தைத் தொட்­டுள்­ளது.

அதிகமான வெப்­பத்­தால் மதிய நேரங்­களில் மக்கள் வெளியே செல்­லவே தயங்­கும் சூழலே இருந்து வரு­கிறது.

மக்­களை வாட்டி வதைக்­கும் இந்த வெப்ப அலை இன்­றோடு முடி­வ­டை­கிறது.

இன்று முதல் வெப்­ப­நிலை மெல்ல மெல்ல குறைந்­து­வி­டும் என இந்­திய வானிலை ஆய்வு நிலையம் நேற்று தெரி­வித்­தது.

தென்­மேற்­குப் பரு­வ­மழை தொடங்­கு­வ­தற்­கான சூழல் நில­வு­வ­தாக வானிலை ஆய்வு நிலையம் தக­வல் தெரி­வித்­துள்­ளது. 24ஆம் தேதி கேர­ளா­வில் கன­மழை பெய்­யும் என தெரி­வித்­துள்­ளது.

ராஜஸ்­தான், பஞ்­சாப், டெல்லி, உத்­த­ரப்­பி­ர­தே­சம், அரி­யானா, சத்­தீஸ்­கர் உள்­ளிட்ட மாநி­லங்­களில் ஆலங்­கட்டி மழை பெய்ய வாய்ப்பு உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆறு மாநி­லங்­களில் மலைப்­ப­கு­தியை ஒட்­டிய இடங்­களில் கன­மழை பெய்­யக்­கூ­டும் என்று இந்­திய வானிலை ஆய்வு நிலையம் தெரி­வித்­துள்­ளது.