தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீ

1 mins read
91db9eaa-aa14-46ed-9882-4e094e65ea5d
மருத்துவமனையின் ‘எண்டோஸ்கோபி’ பிரிவு அமைந்துள்ள அறையில் தீப்பிடித்தது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திங்கட்கிழமை திடீரென்று தீப்பிடித்தது. மருத்துவமனையின் ‘எண்டோஸ்கோபி’ பிரிவு அமைந்துள்ள அறையில் மூண்ட தீ மளமளவென அந்த அறை முழுவதும் பரவியதாக அதிகாரிகள் கூறினர். தீ விபத்தை அடுத்து சம்பவம் நிகழ்ந்த தளத்தில் இருந்த நோயாளிகள் அனைவரும் அவசரமாக மீட்கப்பட்டு வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர். பலத்த தீ காரணமாக மருத்துவமனைக் கட்டடத்தில் இருந்து அடர்த்தியான கரும்புகை வெளியானது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் 8 வாகனங்களில் விரைந்து சென்ற தீ அணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தால் எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்