வானூர்தி மூலம் மளிகைப்பொருள்கள், மருந்து விநியோகம்

1 mins read
3eb736b1-bbe0-4b28-afa5-fee3e254c9ee
‘ஸ்கை ஏர் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம், ஆளில்லா வானூர்தி மூலம் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை விநியோகம் செய்யும் சேவையை தொடங்க உள்ளது. - படம்;: இந்திய ஊடகம்

கோல்கத்தா: இந்தியாவில் புதுடெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘ஸ்கை ஏர் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம், ஆளில்லா வானூர்தி மூலம் வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை விநியோகம் செய்யும் சேவையைத் தொடங்க உள்ளது.

இந்நிறுவனம் மேற்கு வங்கத்தின் தலைநகர் கோல்கத்தாவில் இந்தச் சேவையைத் தொடங்க திட்டமிட்டு உள்ளது.

இது பற்றி விளக்கிய நிறுவனத்தின் துணைத் தலைவர் இஷான் குல்லார், “கோல்கத்தாவின் நியூ டவுன் பகுதியில் வானூர்திகள் மூலம் மளிகைப் பொருட்கள், மருந்துப் பொருட்களை விநியோகம் செய்ய உள்ளூர் நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். முதல்கட்டமாக நியூ டவுன் பகுதியில் சேவை தொடங்கும்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்