தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

100 ஆண்டுகள், 123 அடி தோசை: கின்னஸ் சாதனை படைத்த எம்டிஆர்

1 mins read
335ec93a-646d-404e-892f-bca6ae3298d8
75 சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் ஆக நீளமான தோசை உருவாகி, கின்னஸ் சாதனை படைத்தது எம்டிஆர். - படம்: இபிஏ
multi-img1 of 3

தனது 100வது ஆண்டைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், ஆக நீளமான தோசையை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளது ‘எம்டிஆர் ஃபுட்ஸ்’.

‘லோர்மன் கிச்சன் இக்குவிப்மண்ட்’ நிறுவனத்துடன் இணைந்து அதன் பொம்மசாண்ட்ரா தொழிற்சாலையில், இந்தத் தனிச்சிறப்பு வாய்ந்த தோசையை எம்டிஆர் ஊழியர்கள் தயாரித்தனர்.

சமையல் வல்லுநர்கள், வளரும் சமையல் கலைஞர்கள் என மொத்தம் 75 பேர் கூட்டாக இணைந்து 123 அடி நீளத்தில் தோசையை உருவாக்கினர்.

“நாங்கள் 100 அடி நீளமுடைய தோசையைத்தான் உருவாக்க நினைத்தோம். ஆனால், 123 அடி நீளத்தில் உருவாக்கி எங்களையே நாங்கள் விஞ்சிவிட்டோம்,” என்றார் எம்டிஆர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு சுனே பாசின்.

முன்னதாக, ஆக நீளமான தோசைக்கான உலகச் சாதனையையும் எம்டிஆர்தான் படைத்திருந்தது. அப்போது தயாரிக்கப்பட்ட தோசை, 16.68 மீட்டராக (ஏறத்தாழ 54 அடி) இருந்தது.

இந்நிலையில், தோசையை சமூக உணர்வுடன் மற்றவர்களுடன் பகிர்ந்தும் உண்டனர், எம்டிஆர் ஊழியர்கள்.

குறிப்புச் சொற்கள்