வேட்பாளர்களில் 8%தான் பெண்கள்; 6 மாநிலங்களில் பெண் வேட்பாளர்கள் இல்லை

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல், முதல் கட்ட தேர்தலில் போட்டியிடும் 1,625 வேட்பாளர்களில் 8 விழுக்காட்டினரே பெண்கள். 6 மாநிலங்களில் பெண் வேட்பாளர்களே இல்லை என்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட தரவுகள் சுட்டுகின்றன.

18-வது மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. முதல் கட்டத்தில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களின் 102 தொகுதிகளிலும் வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளன.

அதிகபட்சமாக தமிழகத்தில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில் 76 பேர் பெண்கள்.

மணிப்பூர், நாகலாந்து, லட்சத்தீவுகள், சத்தீஸ்கர், திரிபுரா மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய 6 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் பெண் வேட்பாளர்களே போட்டியிடவில்லை.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 8,054 வேட்பாளர்களில் 726 பெண்கள் (9%). இவர்களில் 78 பேர் மக்களவைக்கு தேர்வான நிலையில், 575 பேர் டெபாசிட்டை இழந்தனர். பிற கட்சிகளுக்கு முன்னுதாரணமாக திரிணமூல் காங்கிரஸ் 41% பெண்களுக்கு வாய்ப்பு அளித்திருந்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!