பாட்னா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதன்கிழமை பீகார் மாநிலத்தில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது காங்கிரஸ் கட்சியையும், இண்டியா கூட்டணியையும் அவர் கடுமையாக சாடினார்.
கயா மாவட்டத்தின் குராரு பகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் கட்சியும், ராஷ்ட்ரீய ஜனதாதளமும் திருப்திபடுத்தும் அரசியலில் ஈடுபட்டு உள்ளன. அதனால்தான் காங்கிரசுக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் 370வது சட்டப்பிரிவை நீக்கியதை எதிர்த்து வருகின்றன,” என்றார்.
இந்தியாவை உடைக்க வடக்கு-தெற்கு பிரிவினையை காங்கிரஸ் கட்சி உருவாக்குகிறது என்றும் அதன் தலைவர் ராகுல் காந்தியும் இந்த விவகாரத்தில் மவுனம் சாதிக்கிறார் என்றும் அவர் கூறினார்.
“ஆனால் காங்கிரசின் இந்த திட்டத்தை தேசிய ஜனநாயக கூட்டணியும், நாட்டு மக்களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இத்தகைய பிரிவினை சக்திகளுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தகுந்த பதிலடி கொடுக்க நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். அத்துடன் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 400க்கு மேற்பட்ட இடங்களை அவர்கள் உறுதி செய்வார்கள் என்றார் அமித்ஷா.

