புதுடெல்லி தண்ணீர் பஞ்சம்: யமுனை வாரியத்தை அணுக உத்தரவு

1 mins read
15461d60-1b83-491a-b02b-a369a5c56c41
புதுடெல்லி மக்கள் தண்ணீர் லாரியிருந்து குழாய்கள் மூலம் தண்ணீரைப் பிடித்துச் செல்லும் காட்சி. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: கூடுதல் நீர் வழங்கக் கோரி, யமுனை நதி வாரியத்தை அணுகுமாறு டெல்லி அரசை உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை கேட்டுக் கொண்டது. மேலும் இதுபோன்ற கோரிக்கைகளை விரைவில் பரிசீலனைசெய்யுமாறு வாரியத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தியத் தலைநகரான புதுடெல்லியில் நிலவும் தண்ணீர்த் தட்டுப்பாட்டை எடுத்துரைத்தும் ஹரியானா வழியாக உபரி நீரை திறக்க இமாச்சலப் பிரதேசத்துக்கு உத்தரவிடக் கோரியும் டெல்லி அரசு சமர்ப்பித்த மனுவை நீதிமன்றம் வியாழக்கிழமை விசாரித்தது.

நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய குழு இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, “ இந்த பிரச்சினை சிக்கலானது மற்றும் உணர்திறன் கொண்டது,” என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், “மனிதநேய அடிப்படையில் கூடுதலாக 150 கன அடி தண்ணீர் வழங்குவதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்குமாறு யமுனை நதி வாரியம் டெல்லிக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அத்தகைய விண்ணப்பம் ஏற்கெனவே செய்யப்படவில்லை என்றால் வியாழக்கிழமை (ஜூன் 13) மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம். வாரியம் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) கூட்டத்தைக் கூட்டி, இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்கும்,” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

குறிப்புச் சொற்கள்