சத்தீஸ்கர்: அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களுக்கு எழுத்துப்பிழைகளுடன் பாடம் நடத்திய காணொளி வெளியானதைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு தொடக்கப் பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் எல்.பி. பிரவீன் டோப்போ, வகுப்பறையில் குழந்தைகளிடம் ஆங்கில வார்த்தைகளை எழுத்துப் பிழைகளுடன் கற்றுத் தந்தார்.
அவர் ‘தந்தை’க்கு ‘fader’ என்றும், ‘மூக்குக்கு’ ‘noge’ என்றும், அத்துடன் வார நாள்கள், ‘அப்பா’, ‘அம்மா’ போன்ற பொதுவான வார்த்தைகளையும் தவறாகக் கற்பித்தார்.
இந்தச் சம்பவம் ரகசியமாக காணொளியாகப் பதிவுசெய்யப்பட்டு சமூக ஊடகங்களில் பரவியது. அதன் விளைவாக, கல்வித்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து, அந்த ஆசிரியரை இடைநீக்கம் செய்துள்ளது.
இந்தச் செய்தி, கிராமப்புற பள்ளிகளின் கல்வித் தரம் குறித்து அதிக அக்கறை கொள்ளவேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.

