சென்னை: தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்ட செலவினங்களைத் தவிர பிற நடவடிக்கைகளுக்குக் கோயில் நிதியைப் பயன்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.
சென்னையின் கந்தகோட்டம் என்ற பகுதியில் உள்ள கோயிலின் கட்டுமான நடவடிக்கைகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட வேளையில் இந்து அறநிலையத்துறை அவ்வாறு கூறியது.
வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் விசாரணையின் முடிவில் உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
அதில், கந்தகோட்டம் ஸ்ரீ முத்து குமாரசுவாமி கோவில் நிலத்தில் இடம்பெறும் கட்டுமானப் பணிகள் தொடரலாம் என்றும் அந்த கட்டுமானங்களை, அறநிலையத்துறை சட்டப்படி பக்தர்கள் வசதிக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும், வணிக ரீதியில் பயன்படுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டது.
கோவில் நிதியில் வணிக வளாகங்களைக் கட்டக்கூடாது என்றும் கோவில் நிதியில் வணிக ரீதியில் கட்டுமானங்களை மேற்கொள்ளும் அதிகாரிகள்மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறு செய்யத் தவறினால் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

