அமைதியின்மை: பங்ளாதேஷிலிருந்து இந்தியாவுக்குத் தாவும் அனைத்துலக ஆடை நிறுவனங்கள்

அமைதியின்மை: பங்ளாதேஷிலிருந்து இந்தியாவுக்குத் தாவும் அனைத்துலக ஆடை நிறுவனங்கள்

படம்: ஏஎஃப்பி

28 Nov 2026 - 2:31 pm

2 mins read

டாக்கா: தொழிலாளர் போராட்டங்களால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாலும் உயர்ந்து வரும் செலவினங்களால் நாட்டின் போட்டித்தன்மை குறைந்ததாலும் உலகளாவிய முன்னணி ஆடை விற்பனை நிறுவனங்கள் சில பங்ளாதேஷ் வர்த்தகத்தைக் குறைத்து வருகின்றன.

அவற்றில் ஜாரா, எச் அண்ட் எம் போன்ற நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.

நவம்பர் மாதத்தின் முதல் பாதியில் தங்களது மாதாந்தர ‘ஆர்டர்’களில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கை அந்த நிறுவனங்கள் பிற ஆசிய உற்பத்தி மையங்களுக்கு மாற்றியுள்ளதாக மூன்று தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 1 முதல் நவம்பர் 18 வரையிலான காலகட்டத்தில், ஆடை நிறுவனங்கள் பங்ளாதேஷிலிருந்து கிட்டத்தட்ட US$254 மில்லியன் (S$327.53 மில்லியன்) மதிப்பிலான ‘ஆர்டர்’களை வேறு இடங்களுக்கு மாற்றியுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை அண்டை நாடான இந்தியாவிற்குச் சென்றுள்ளதாக உரிமையாளர்கள் கூறினர்.

பங்ளாதேஷின் பொருளியலுக்குப் பேரிடியாக அமைந்துள்ள இந்த மாற்றம், தற்போதைய அமைதியின்மைக்குப் பிறகும் தொடரக்கூடும் என்று கருதப்படுகிறது.

உயர்ந்து வரும் ஊதியம், எரிசக்திப் பற்றாக்குறை, அரசியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவை, சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய ஆடை ஏற்றுமதியாளராக பங்ளாதேஷ் இருந்து வருகிறது.

அந்த அளவுக்கு பங்ளாதேஷை உயர்த்திய ‘குறைந்த செலவு’ என்ற சாதகமான அம்சம் பலவீனமாகியுள்ளதாகத் தொழில்துறைத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

இது, உலகளாவிய நிறுவனங்களைத் தங்களது கொள்முதல் இடங்களைப் பன்முகப்படுத்தத் தூண்டியுள்ளது.

பங்ளாதேஷின் ஏற்றுமதி வருவாயில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமாகவும் உற்பத்தித் துறை வேலைவாய்ப்புகளில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டையும் கொண்டுள்ள ஆடை உற்பத்தித் துறையில், போராட்டங்கள் காரணமாக US$400 மில்லியனுக்கும் அதிகமான உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பங்ளாதேஷ் ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, ‘ஆர்டர்’கள் திசைதிருப்பப்பட்டதன் மூலம் இந்தியா ஆகப்பெரிய பயனாளியாக உருவெடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்