தீபாவளி சமயத்தில் தென்னிந்திய சொத்துச் சந்தையில் நல்ல முதலீடுகளைச் செய்ய விரும்புவோருக்குக் கைகொடுக்கவுள்ளது இவ்வார இறுதியில் (அக்டோபர் 11, 12) மரினா பே சேண்ட்சில் நடைபெறவிருக்கும் சொத்துக் கண்காட்சி.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி எனத் தென்னிந்தியாவில் விரைவாக வளர்ந்துவரும் பகுதிகளில் அமைந்துள்ள உன்னதமான குடியிருப்பு, வணிகக் கட்டடங்கள்குறித்த விவரங்கள் கண்காட்சியில் இடம்பெறும்.
புகழ்பெற்ற, அங்கீகாரம் பெற்ற சொத்து நிறுவனங்களை நேரடியாகக் கண்டு, நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற இது நல்ல வாய்ப்பாக அமையும்.
சேண்ட்ஸ் மாநாட்டு, கண்காட்சி மையத்தின் நான்காம் தளத்தின் மெலாட்டி பால்ரூமில் இரு நாள்களும் காலை 10 முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது.
இந்தியாவில் ‘தி இந்து’ செய்தித்தாளை நடத்தும் ‘தி இந்து குழுமம்’, சிங்கப்பூரில் முதன்முறையாக இக்கண்காட்சியை நடத்துகிறது. ‘டி ஐடியாஸ்’ நிறுவனம் நிகழ்ச்சியை நடத்தும் பங்காளியாக இணைகிறது.
சட்டதிட்டங்கள் பற்றிய தகவல்கள்
வரிவிதிப்பு, சொத்து தொடர்பான சட்டங்கள், வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான முதலீடுகள் போன்றவற்றைப் பற்றிக் கண்காட்சிவழி அறிந்துகொள்ளலாம்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் (NRIs), இந்தியப் பூர்விகத்தைக் கொண்டவர்கள் (PIOs), இந்தியப் பூர்விகம் அல்லாதவர்கள் என ஒவ்வொரு பிரிவினரும் எவ்வாறு, எத்தகைய சொத்துகளை வாங்கலாம் எனத் தெரிந்துகொள்ளவும் கண்காட்சி உதவும்.
புதுவகையான சொத்துகள்
முதியோருக்கென நடவடிக்கைகள், மருத்துவ வசதிகளை ஒரே இடத்தில் வழங்கும் குடியிருப்புப் பேட்டைகள் பிரபலமடைந்து வருகின்றன. இந்தியாவில் தனியாக வாழும் வயதான பெற்றோருக்காக வீடு வாங்க விரும்புவோர் கருத்தில்கொள்ளலாம்.
தொடர்புடைய செய்திகள்
அப்பாசுவாமி ரியல் எஸ்டேட்ஸ், அபர்னா, பிரிகேட், கேசாகிரான்ட், டிஏசி, ஜி ஸ்குவேர், ஹிரானந்தனி சமூகங்கள், லேன்கோர் போன்ற முன்னணி நிறுவனங்கள் கண்காட்சிக்கு வரும்.
தொலைக்காட்சிப் புகழ், ‘டிடி’ என்றழைக்கப்படும் திவ்யதர்ஷினி கண்காட்சிக்கு சிறப்பு வருகையளிப்பார்.
கண்காட்சியின் தொடக்கவிழா முதல் நாள் காலை 10.30 மணிக்கு நடைபெறும்.
கண்காட்சிக்குப் பதிவுசெய்ய hindu.deideaz.com இணையத்தளத்தை நாடலாம். பதிவு இலவசம். வருவோருக்குத் தீபாவளி அன்பளிப்புப் பைகள் வழங்கப்படும்.
மேல்விவரங்களுக்கு +65 9824 6998 எண்ணில் தொடர்புகொள்ளலாம்.