வெளிநாட்டு இளையர்களும் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த இளையர்களும் இலவசமாக இந்தியா செல்ல ஓர் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது.
இந்திய வெளியுறவு அமைச்சு, ‘பாரத் கோ ஜனியே’ (Bharat Ko Janiye - Know India) எனும் ஒரு வினாடி புதிருக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் புதிரில் கலந்துகொள்பவர்கள் இந்திய மரபு, கலாசாரம், கலை, சமையற்கலை, வரலாறு, மக்கள், இந்தியாவின் வளர்ச்சி, பங்களிப்பு தொடர்பான கேள்விகளுக்கு சரியான விடையளிக்க வேண்டும்.
ஆக அதிக மதிப்பெண்கள் பெரும் முதல் 30 பேருக்கு இந்தியா செல்ல இலவசப் பயணம் காத்திருக்கிறது. சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் அந்தப் பயணத்தை வழிநடத்தும்.
இந்தப் புதிர் அடுத்த மாதம் 11ஆம் தேதி வரை இணையத்தில் இடம்பெறும். புலம்பெயர்ந்த இளையர்களை இந்தியாவில் அவர்களின் உறவுகளோடு இணைக்க இத்தகைய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
இப்புதிரில் பங்கேற்க விரும்புவோர் https://bkjquiz.com/ எனும் இணையத்தளத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.

