வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் பெரியவர்களின் தலையீடு குறைவு: ஆய்வு

வாழ்க்கைத் துணையைத் தேடுவதில் பெரியவர்களின் தலையீடு குறைவு: ஆய்வு

2 mins read
c6f172d8-e54a-4aae-b1e4-a5ab1b24dac5
பண்டிகைக் காலங்களில் ‘மில்லேனியல்’, ‘ஜென் சீ’ தலைமுறைகளைச் சேந்தோரைச் சமூகம் தரும் அழுத்தம் எவ்வாறு பாதிக்கின்றன என்பது குறித்தும் இணையரை குடும்பத்திற்கு அறிமுகம் செய்யும் போக்கு குறித்தும் இந்த ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. - படம்: பிக்சாபே

வாழ்க்கைத் துணையைத் தேடவும் குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவும் பெற்றோர்/ பெரியவர்கள் கொடுக்கும் அழுத்தம் குறைந்துள்ளதாக சிங்கப்பூர் இளையர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பெண்களுக்கான வாழ்க்கைத் துணையை தேடும் செயலியான ‘பம்பிள்’ நடத்திய இணை தேர்ந்தெடுத்தல் தொடர்பிலான அண்மைய ஆய்வில், மூத்தோர்களிடையே பிறரது காதல் வாழ்வில் தலையிடும் மனநிலை குறைந்துள்ளதாகவும், 24 விழுக்காட்டினர் மட்டுமே அந்த அழுத்தத்தை இன்னும் உணர்வதாகத் தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், தங்களுக்கான துணையைத் தேட, தாங்களாகவே அழுத்தம் அளித்துக்கொள்வதாகவும் இளையர்கள் கூறியுள்ளனர்.

குறிப்பாக, தனிமை உணர்வைப் போக்க 40 விழுக்காட்டினரும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டும் என்ற சமூகக் கட்டமைப்பு தரும் அழுத்தம் காரணமாக 36 விழுக்காட்டினரும் சக நண்பர்களின் வாழ்வைப் பார்த்து ஏற்பட்ட விருப்பத்தினால் 34 விழுக்காட்டினரும் துணையைத் தேட முயல்வதாகக் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு சிங்கப்பூரில் 18 முதல் 43 வயது வரை உள்ள ஒற்றையரிடம் நடத்திய இந்த ஆய்வு, பதிலளித்தோரில் 77 விழுக்காட்டினர் காதல் வயப்பட வேண்டும் எனும் அழுத்த உணர்வைக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

குறிப்பாக, பண்டிகைக் காலத்தில் குடும்பமாக இணைந்து கொண்டாடும் நேரங்களில் தங்கள் காதல் வாழ்க்கை குறித்த அழுத்தம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.

இளையர்கள், குறிப்பாக பெண்கள் தங்களுக்கான வாழ்க்கைத் துணையைக் குடும்பத்துக்கு அறிமுகம் செய்வது உள்ளிட்ட பெரிய தீர்மானங்கள் எடுப்பதில் அதிக சுதந்திரமும் ஆளுமையும் கிடைத்துள்ளதாக நம்புகின்றனர்.

தங்கள் துணையைக் குடும்பத்துக்கு அறிமுகம் செய்வதற்கான காலக்கெடு குறித்தும் இந்த ஆய்வு தகவல் வெளியிட்டுள்ளது. ஆண்களை விட பெண்கள் சராசரியாக குறைந்தது ஒரு மாத காலம் கூடுதல் அவகாசம் எடுத்துக்கொள்வதாக ஆய்வு சுட்டியது.

மேலும், உணர்வைக் கையாள்வதில் முதிர்ச்சி, நன்னடத்தை உள்ளிட்ட பண்புகள் கொண்ட துணையைத் தேர்ந்தெடுப்பதில் ஆண்களை விட பெண்கள் அதிக கவனம் செலுத்துவதாகவும் ஆய்வு குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்