எளிய குடும்பத்திலிருந்து வெற்றிப்படிகளில் ஏறியவர்

2 mins read
சொந்த உணர்வுகளை மதித்தார்.; திறன் மேம்பாட்டைத் தொடர்ந்தார்; நம்பகத்தன்மையை வளர்த்தார்
b3a7ef53-3eee-4805-8bf6-bae5eb27dbe8
மெய்நிகராக்கம், மேகக் கணினி சேவை ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்டுள்ள விஎம்வேர் (VMware) நிறுவனத்தில் உமா தனபாலசிங்கம்,  தம் 38வது வயதில் துணைத் தலைவராகப் பொறுப்பேற்றார்.  - படம்: உமா தனபாலசிங்கம்

சராசரியைவிடச் சிறந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உறுதி, உமா தனபாலசிங்கத்தை புதிய உச்சங்களைத் தொடவைத்துள்ளது.

ஜோகூர் பாருவில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் திருவாட்டி உமா.

அவர் பிறந்தபோது அவர் தாயாருக்கு 35 வயது, தந்தைக்கு 40 வயது. உடன்பிறந்தாேர் இளமையில் இறந்தனர். அவரது வளர்ப்புச் சகோதரியும் அவரும்தான் அவர்களின் சொத்து.

தந்தை வாகனங்களைப் பழுதுபார்ப்பவர். தாயார், தாதிமைப் பணி செய்பவர். நடுத்தரக் குடும்பம் என்பதால் பெற்றோர் பார்த்துப் பார்த்து செலவு செய்ய வேண்டியிருந்தது.

“என்னைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப என் பெற்றோருக்கு வசதி இல்லை. அரசாங்கக் கடன் எடுத்துத் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிப்பை மேற்கொண்டேன்,” என்று அவர் கூறினார்.

மூச்சுக்காற்று போன்றது திறன் மேம்பாடு

வேலையிட எதிர்பார்ப்புகளை நன்கு புரிந்துகொண்டு தமது ஆளுமைத்திறத்தை வளர்த்துக்கொண்ட திருவாட்டி உமா, படிப்படியாக உயர்ந்தார்.

“என்னால் இயன்ற அத்தனைச் சான்றிதழ்களையும் தொடர்ந்து எடுத்து வந்தேன். என்னால் எவ்வளவு தூரம் போக முடியும் என்ற முனைப்பு, என்னைத் தொடர்ந்து கற்க வைத்தது,” என்று இவர் கூறுகிறார்.

மெய்நிகராக்கம், மேகக் கணினி சேவை ஆகியவற்றில் நிபுணத்துவம் கொண்டுள்ள விஎம்வேர் (VMware) நிறுவனத்தில் அவர் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றார்.

2023ன் இறுதியில் அந்த வேலையை விட்டுவிட்டு, பணிசார்ந்த சிறுபான்மைப் பெண்களுக்கு ஆதரவான, ‘த எலிவேட் க்ரூப்’ (The Elevate Group) என்ற அமைப்பையும் உருவாக்கினார்.

நயம்பட உரை, கதவுகளைத் திற

பெரும்பாலானோர் என்ன செய்யத் தவறுகின்றனர் என்பதைக் கூர்ந்தாய்ந்து தம் தனித்துவத்தை வளர்ப்பது இவரது உத்தி.

நம்பகத்தன்மையும் நாணயமும் முக்கியச் சொத்துகள் எனக் கூறும் திருவாட்டி உமா, உலகத்தோடு ஒட்ட வாழ்வது முக்கியம் என்பது அனுபவத்தில் கற்றது.

“என் இனம் சார்ந்த அடையாளக் கூறுகளை நான் வெளிப்படுத்துவதில்லை. வர்த்தக உலகிற்குத் தோதான மேற்கத்திய முறையிலான தோற்றத்தையும் பேச்சுத்தொனியையும் கொண்டுள்ளேன்,” என்றார் திருவாட்டி உமா.

குறிப்புச் சொற்கள்