எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான கல்லறை கண்டுபிடிப்பு

எகிப்தில் 4,400 ஆண்டுகள் பழமையான இதுவரை கண்டு பிடிக்கப்படாத கல்லறையை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். “நூற்றாண்டின் அரிய கண்டுபிடிப்பு,” என்று தொல் பொருள் ஆய்வு உச்ச மன்றத்தின் தலைமை செயலாளர் மொஸ்தபா வசிரி இதனை சுட்டிக்காட்டினார். கெய்ரோவுக்கு அருகே சக் காரா பிரமிட்டில் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது. கல்லறை முழுவதும் வண்ண வண்ண வடிவங்களும் சிலைகளும் காணப்பட்டன. வாஹ்டியே என்று அழைக்கப் படும் உயர்மட்ட அரச குடும்ப குரு தமது தாயார், மனைவி, உறவினர்களுடன் இருப்பதை அலங்கரிக்கப்பட்ட வடிவங்கள் காட்டுவதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கூறினர். இம்மாதம் 16ஆம் தேதி ஆய் வாளர்கள் தோண்டும் பணியைத் தொடங்கினர். அப்போது கல்லறையும் வண்ணத்தில் தீட்டப்பட்ட வடிவங்களும் தென்பட்டன. கல்லறை இரு அடுக்கு களாக உள்ளது என்றும் மேலடுக் கில் 24 சிலைகளும் கீழ் அடுக் கில் 31 சிலைகளும் இருந்தன என்றும் வசிரி கூறினார். பல சிலைகள் ஆள் உயரத் துக்கு இருந்தன. சில மூன்று அடி உயரம்கூட இல்லை என்று அவர் தெரிவித் தார்.

புதிய கல்லறையின் தோற்றம். சுமார் 4,400 ஆண்டுக்கு முந்தைய மன்னர் காலத்திய குருமாரின் கல்லறை என்பது அங்கு தீட்டப்பட்ட வடிவங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்