அழகிய ஓவியமாக காட்சியளிக்கும் ‘வியாழன்’

விண்வெளியில் பல ஆண்டுகள் பயணம் செய்த ‘ஜுனோ’ விண் கலம் வியாழன் கிரகத்தை நெருங்கிச் சென்று படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது. அந்தப் படங்களைப் பார்த்த அறிவியல் அறிஞர்கள் திகைத்துப் போயுள்ளனர். வியாழன் கிரகம், ஓவியம் போல காட்சியளித்ததே அதற்கு காரணம். கடல் நாகம் போன்றும் மீன்கள் கூட்டத்தைப் போன்றும் பல்வேறு வடிவங்களில் வியாழ னின் தோற்றம் காணப்பட்டது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, வியாழன் கிரகத்தை ஆராய்வதற் காக ஜுனோ விண்கலத்தை உரு வாக்கியிருந்தது. கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி அன்று புளோரிடாவில் உள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தி லிருந்து ஜுனோ விண்கலம் வியாழனை நோக்கி பாய்ச்சப் பட்டது. ஐந்து ஆண்டு பயணத் திற்குப் பிறகு சூரிய சக்தியில் இயங்கும் ஜுனோ, 2016 ஜூலை 6ஆம் தேதி அன்று வியாழன் கிரகத்தை அடைந்தது. இம்மாதம் 21ஆம் தேதி வியாழனுக்கு மேலே 5,043 கிலோ மீட்டர் உயரத்தில் ஜுனோ பறந்து சென்றது. அப்போது வியாழன் கோளத்தை பல்வேறு கோணங் களில் படம் பிடித்து அது பூமிக்கு அனுப்பி வைத்தது. புரியாத தோற்றத்துடன் ஓவியம் போல காட்சியளிக்கும் வியாழன் கிரகத்தின் படங்களை அறிவியல் அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

சூரிய மண்டலத்தில் இடம்பெற்றுள்ள வியாழன் கிரகத்தை நெருங்கியுள்ள நாசாவின் ஜுனோ விண்கலம் அதனை படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது. அதில் வியாழன் கிரகம் ஒரு ஓவியம்போல காட்சியளிப்பதைக் காண முடிகிறது. படம்: நாசா இணையம்