காளான் சாப்பிடுவதால் மனம் சார்ந்த பிரச்சினைகள் குறையலாம்: என்யுஎஸ் ஆய்வு

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்) 60 வயதுக்கும் மேற்பட்ட கிட்டத்தட்ட 600 சிங்கப்பூரர்களிடம் நடத்திய ஆய்வின் கண்டுபிடிப்புகளின்படி, காளான் சாப்பிடுவது மனநலச் சரிவைக் குறைக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.

ஆய்வில் பங்கேற்றவர்களில் வாரத்தில் ஒரு முறையும் வாரத்தில் 2 முறையும் (கிட்டத்தட்ட 300 கிராம்) காளான் சாப்பிடுவோர் ஒப்பிடப்பட்டார்கள். அதிகமாகக் காளானை உண்போருக்கு மனநலச் சரிவு 57% விழுக்காடு குறைவாக இருந்தது என்று என்யுஎஸ் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.   

இந்த ஆய்வு 2011ஆம் ஆண்டிற்கும் 2017ஆம் ஆண்டிற்கும் இடையே நடத்தப்பட்டது.