நடனமாடியே ரங்கோலி கோலம் போடலாம்

ஹர்­ஷிதா பாலாஜி

 

லிட்­டில் இந்­தி­யா­வின் கிளைவ் ஸ்தி­ரீட்­டில், லிட்­டில் இந்­தியா கடைக்­கா­ரர்­கள் சங்­கம் எனப்­படும் லிஷா­வின் ஆத­ர­வு­டன் நடைபெறும் "தி ரங்­கோலி மூவ்­மென்ட்" நிகழ்ச்­சி­யின் சிறப்பு அங்­க­மாக அமை­கி­றது அதன் "டான்ஸ் பெவி­லி­யன்" எனப்­படும் நட­னக்­கூடம்.

இக்­கூ­டத்­தில், பங்­கேற்­பவர்கள் அங்கு அமைக்கப்பட்ட சின்னஞ்சிறு மேடை­க­ளின் மேல் நின்று ஆடி­ய­வாறு கண்ணைக் கவரும் வண்ண விளக்கொளிக் கோலங்­களை உரு­வாக்­க­லாம்.

மேடை­யில் ஐந்து முறை ஆடி­னால், எதி­ரி­ல் இ­ருக்­கும் எல்­இடி திரை­களில் ஒரு கோலம் தோன்­றும். பங்கேற்பாளர்கள் ஆட ஆட, வெவ்­வேறு வித­மான அற்புதக் கோலங்­கள் திரை­யில் தோன்றி நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

திரை­யில் தோன்­று­கின்ற இக்­கோ­லங்­கள், மெது­வாக மேலே மிதந்து கூடத்­தின் கூரை­யில் உள்ள பெரிய கோலத்­தோடு இணைந்­து­வி­டும்.

மேலும், கூடத்­தி­லி­ருக்­கும் 'கியூ­ஆர்' குறி­யீட்டை திறன்­பே­சியை கொண்டு 'ஸ்கேன்' செய்­தால், இணை­யத்­த­ளத்­தின் வழி­யாக கோலங்­களை வண்­ண­மிட்டு அவற்றை கூரை­யி­லி­ருக்­கும் பெரிய கோலத்­து­டன் திறன்பேசி வழியாகவும் இணைக்கலாம்.

இது­போன்று தொழில்­நுட்­பத்தைப் பயன்­ப­டுத்­தும் நிகழ்ச்­சி­கள், ஒலி மற்­றும் அசை­வு­களை உண­ரக்­கூ­டிய, ஈடு­பாடுமிக்க அனு­ப­வத்தைப் பங்­கேற்­பா­ளர்­க­ளுக்கு அளிக்­கின்­றன.

"சிங்­கப்­பூ­ரி­லுள்ள மற்ற இனத்­த­வ­ரும் இந்­திய கலா­சா­ரத்தைப் பற்றி அறிந்துகொள்ளவே இது­போன்ற மாறுபட்ட, புதிய முயற்­சி­களை நாங்­கள் எடுத்துள்ளோம்," என்­றார் 'டெக்ஸ்­சர் மீடியா' நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி திரு விக்­டர் சூ.

"சிறு­வர்­ முதல் பெரி­ய­வர்­ வரை அனை­வ­ரும் இங்­குள்ள மேடை­களில் உற்சாகத்துடன் நட­ன­மாடி மகிழ்­வதை நாங்­கள் பார்க்­கின்­றோம்," என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"நட­னத்­தை­யும் கோலத்தையும் இணைக்­கும் இந்த நட­னக்­கூடத்தை தொழில்­நுட்­ப உதவியுடன் அமைத்­துள்ளது 'டெக்ஸ்­சர் மீடியா' நிறு­வ­னம்.

"நட­னத்­து­டன் ரங்­கோ­லியை இணைக்­கும் 'டான்ஸ் பெவி­லி­யனை' தவிர, 'ஆர்ட்­டிஸ்ட் பெவி­லி­யன்' எனப்­படும் கலை­ஞர் அங்­கத்­தில் ரங்­கோலி கலைஞரான திரு­மதி விஜயா மோகனின் படைப்­பு­களும் இடம்பெற்றுள்ளன.

மேலும், ஒர்க்‌ஷாப் பெவி­லி­ய­னில், வெள்­ளி, சனி மற்­றும் ஞாயிற்­றுக்கி­ழ­மை­களில் ரங்­கோலி பயி­ல­ரங்­கு­களும் 'விஷு­வல் ஆர்ட்ஸ் சென்­டர்' நடத்­தும் 'மணல் கலை' பயி­ல­ரங்­கு­களும் நடை­பெ­று­கின்­றன. இந்த இல­வச நிகழ்ச்சி மார்ச் 20ஆம் தேதி வரை நடை­பெ­றும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!