புகையிலையால் சுற்றுச்சூழலுக்குக் கேடு

உலகப் புகையிலை எதிர்ப்பு நாள் இன்று அனுசரிப்பு

புகை­யி­லைப் பயன்­பாட்­டால் ஆண்டு­தோ­றும் உல­கில் எட்டு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோர் உயி­ரை இ­ழக்­கின்­ற­னர். இதே வேகத்­தில் புகை­யி­லைப் பயன்­பாடு தொடர்ந்­தால் 2030ஆம் ஆண்­டு­வாக்­கில் இந்த எண்­ணிக்கை குறிப்­பி­டத்­தக்க அளவு அதி­க­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில், புகை­யி­லைப் பயன்­பாட்­டால் ஏற்­படும் உயி­ரி­ழப்பை 2030ஆம் ஆண்­டு­வாக்­கில் மூன்­றில் ஒரு பங்கு குறைக்க இலக்கு வகுக்­கப்­பட்­டுள்­ளது.

உல­க­ளா­விய புகை­யிலை நெருக்­கடி, அத­னால் விளை­யும் மர­ணங்­கள், நோய்­கள் ஆகி­ய­வற்­றைத் தொடர்ந்து, 1987ஆம் ஆண்டு மே 31ஆம் தேதியை உல­கப் புகை­யிலை எதிர்ப்பு நாளாக அனு­ச­ரிப்­பது என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் உறுப்பு நாடு­கள் ஒப்­புக்­கொண்­டன.

அப்­போது முதல், புகை­யி­லைப் பொருள்­க­ளால் ஏற்­படும் பாதிப்பு குறித்து விழிப்­பு­ணர்­வூட்ட ஒவ்­வோர் ஆண்­டும் மே 31ஆம் தேதி உல­கப் புகை­யிலை எதிர்ப்பு நாளாக அனு­சரிக்­கப்­ப­டு­கிறது.

புகையிலை எதிர்ப்பு நாளின் முக்கியத்துவம்

புகைப்­ப­ழக்­கம் ஒரு­வ­ரின் வாழ்­நாளை ஏறத்­தாழ 13 ஆண்­டு­கள் குறைத்­து­வி­டக்­கூ­டும் என்று பல்­வேறு ஆய்­வு­கள் தெரி­விக்­கின்­றன. உட­லில் வேறு நோய்­கள் இருந்து, புகைப்­ப­ழக்­கத்­தைத் தொடர்ந்­தால் அது ஒரு­வ­ரின் வாழ்­நாளை மேலும் குறைத்­து­வி­டும்.

புகைப்பழக்கம் இல்லாவிடில் உலகில் பெரும் எண்ணிக்கையிலான மரணங்களைத் தடுக்கலாம் என்று சில ஆய்வு­கள் கூறு­கின்­றன.

புகைப்­ப­ழக்­கம் ஒரு­வ­ரின் கரு­வு­றும் திறனை பாதிக்­கிறது என்­ப­தை­யும் பல சுவாச நோய்­க­ளுக்கு இட்­டுச்­செல்­கிறது என்­ப­தை­யும் மறந்­து­வி­ட­லா­காது.

இருந்­தா­லும், உல­க­ள­வில் எல்லா வய­தி­ன­ரி­டத்­தி­லும் புகை­யி­லைப் பொருள்­கள் பயன்­பாடு பர­வ­லாக இருக்­கிறது என்­பது வேதனை தரும் செய்தி.

ஆக அதி­க­மாக, சீனா­வில் ஏறக்­கு­றைய 300 மில்லியன் பேருக்­குப் புகைப்­பழக்­கம் உள்­ளது. இந்­தியா, பிரே­சில், இந்­தோ­னீ­சியா, மலாவி, அர்­ஜெண்­டினா, தான்­சா­னியா, ஸிம்­பாப்வே, பாகிஸ்­தான் ஆகி­யவை புகை­யிலை உற்­பத்தி செய்­யும் நாடு­களில் முதல் பத்து இடங்­களில் உள்ள மற்ற நாடு­கள்.

இவ்­வாண்­டிற்­கான கருப்­பொ­ருள்

ஒவ்­வோர் ஆண்­டும் வெவ்­வேறு கருப்­பொ­ரு­ளு­டன் உல­கப் புகை­யிலை எதிர்ப்பு நாள் அனு­ச­ரிக்­கப்­ப­டு­கிறது. எந்த வடி­வி­லும் புகை­யி­லை­யைப் பயன்­ப­டுத்­து­வ­தால் ஏற்­படும் தீங்­கு­கள் குறித்­தும் அத­னால் ஏற்­படும் உடல்­ந­லக் குறை­பா­டு­கள் குறித்­தும் விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­து­வதே இதன் நோக்­கம்.

அவ்­வ­கை­யில், 'சுற்­றுச்­சூ­ழ­லைக் காப்­போம்' என்­பது இவ்­வாண்­டிற்­கான உல­கப் புகை­யிலை எதிர்ப்பு நாளின் கருப்­பொ­ருள்.

மக்­க­ளின் உடல்­ந­லத்­து­டன் சுற்­றுச்­சூ­ழ­லை­யும் எந்த அள­விற்கு பாதிக்­கிறது என்­பதை இது வலி­யு­றுத்­து­கிறது.

அத்­து­டன், சுற்­றுச்­சூ­ழல்­மீது புகை­யிலை ஏற்­ப­டுத்­தும் கடு­மை­யான விளை­வு­களை மக்­கள் எந்த அள­விற்­குப் பொருட்­ப­டுத்­தா­மல் உள்­ள­னர் என்­ப­தை­யும் இது எடுத்­துக்­காட்­டு­வ­தாக உள்­ளது.

எடுத்­துக்­காட்­டாக, தூக்­கி­ எறி­யப்­படும் சிக­ரெட் துண்­டு­கள் எந்த அள­விற்கு நெகிழி மாசு­பாட்­டிற்­குப் பங்­க­ளிக்­கிறது என்­ப­தைப் பற்றி மக்­க­ளி­டம் அதிக புரி­தல் தேவைப்­படு­கிறது. மேலும், புகை­யி­லைப் பயி­ரி­ட­லுக்கு அதிக அளவு நீரும் உரங்­களும் தேவைப்­ப­டு­கின்­றன.

சிக­ரெட் புகைப்­ப­தன் மூலம் 84,000,000 டன் கரி­ய­மி­ல­வாயு வளி­மண்­ட­லத்­தில் கலக்­கிறது என்­பதன்­மூ­லம் சிக­ரெட்­டு­கள் சுற்­றுச்­சூ­ழ­லில் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கிறது என்­பதை மதிப்­பி­ட­லாம்.

புகை­யி­லை­யால் வெளி­யா­கும் புகை மூன்று வெவ்­வேறு பசுமை இல்ல வாயுக்­களை வெளி­யி­டு­கின்­றன.

புகை­யி­லைப் பயன்­பாட்­டைக் கைவி­டு­வ­தால் புற்­று­நோய் போன்ற உயி­ரைப் பறிக்­க­வல்ல நாட்­பட்ட நோயைத் தடுக்­க­லாம். அத்­து­டன், நீடித்து நிலைக்­கத்­தக்க வளர்ச்சி இலக்­கு­களை உல­கம் எட்­ட­வும் அது கைகொ­டுக்­கும்.

குரல் பாதிக்­கப்­ப­ட­லாம்

புகைப்­ப­ழக்­கம் குர­லை­யும் பாதிக்­க­லாம் என்று மருத்­து­வர்­கள் எச்­ச­ரிக்­கின்­ற­னர்.

"சிக­ரெட் போன்ற புகை­யி­லைப் பொருள்­களில் நூற்­றுக்­க­ணக்­கான வேதிப்­பொ­ருள்­கள் உள்­ளன. அந்த வேதிப்­பொ­ருள்­கள் ஒரு­வ­ரது குரல் நாண்­களில் அழற்­சியை ஏற்­ப­டுத்­த­லாம். ஒவ்­வொரு முறை புகைக்­கும்­பொ­ழு­தும், குரல் நாண்­கள் வழி­யா­கப் புகை நுரை­யீ­ர­லைச் சென்­ற­டை­கிறது. எந்­தப் புகையை சுவா­சித்­தா­லும் அது அழற்சி, தொண்டை எரிச்­சலை ஏற்­ப­டுத்தி, சளி­யை­யும் இரு­ம­லை­யும் அதி­கப்­ப­டுத்­தும்," என்­கி­றார் மும்பை குளோ­பல் மருத்­து­வ­ம­னை­யின் காது-மூக்கு-தொண்டை அறுவை சிகிச்சை மருத்­து­வர் பிரார்த்­தனா ஜக்­தாப்.

அத்­து­டன், புகைப்­ப­ழக்­கம் குரல் நாணின் சமச்­சீர், வீச்சு, சுழற்சி ஆகி­ய­வற்­றில் குறிப்­பி­டத்­த­தக்க மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி, ஒரு­வரது குரல் தன்­மை­யையே மாற்­றி­வி­ட­லாம் என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

"புகைப்­ப­ழக்­கம் உள்ள ஒரு­வ­ரின் குர­லைப் பாது­காக்க, கூடிய விரை­வில் அப்­ப­ழக்­கத்தை அவர் கைவி­டு­வ­து­தான் ஒரே வழி. குரல் நாண், குரல்­வளை அழற்சி குண­மாக மாதக்­க­ணக்­கில் ஆக­லாம் என்­றா­லும், புகைப்­ப­தைக் கைவிட்ட ஒரு சில வாரங்­க­ளி­லேயே நல்ல மாற்­றங்­க­ளைக் காண­லாம்," என்­றார் டாக்­டர் பிரார்த்­தனா.

புகைப்­ப­தால் வாய்ப்­ப­கு­தி­யில் ஏற்­படும் பாதிப்­பு­கள் பற்றி விவரித்த மும்பை சர் எச் என் ரிலை­யன்ஸ் அற­நி­று­வன மருத்­து­வ­மனையின் மருத்­து­வர் புஜன் பரிக், "புகைப்­பதால் வாய்ப்­பகு­தி­யில் புற்­று­நோய் ஏற்­படும் அபா­யம் அதி­க­ரிக்­கும். கறை­ப­டிந்த பற்­கள், ஈறு பிரச்­சினை­கள், பற்­சிதைவு போன்ற பாதிப்­பு­களும் தோன்றி, பின்­னர் பற்­களையே பறி­கொ­டுக்க நேரி­ட­லாம்," என்­றார்.

புகையிலை குறித்த முக்கியத் தகவல்கள்

♦ ஆண்டுதோறும் எட்டு மில்லியனுக்கு மேற்பட்டோர் மரணத்திற்குப் புகையிலை காரணமாகிறது. ஏழு மில்லியனுக்கு மேற்பட்டோர் நேரடிப் புகையிலைப் பயன் பாட்டாலும் பிறர் புகைப்பதன் மூலம் வெளியிடும் புகையை சுவாசிப்பதால் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் பேரும் இறக்க நேரிடுகிறது.

♦ உலகில் புகையிலை பயன்படுத்தும் 1.3 பில்லியன் பேரில் 80 விழுக்காட்டினர் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

♦ 2020ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் 22.3 விழுக்காட்டினர் புகையிலை பயன்படுத்தினர்.

♦ புகையிலையைப் பயிரிடுவதற்காக ஒவ்வோர் ஆண்டும் உலகில் ஏறத்தாழ 3.5 மில்லியன் ஹெக்டர் நிலப்பரப்பு அழிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுதோறும் 200,000 ஹெக்டர் காடுகள் அழிக்கப்படுகின்றன; மண் அரிப்பும் ஏற்படுகிறது.

♦ புகையிலைப் பயன்பாட்டால் உலகின் நீர், புதைபடிவ எரிபொருள், தாதுப்பொருள் வளம் குறைந்து போகிறது.

♦ ஒவ்வோர் ஆண்டும் 4.5 டிரில்லியன் சிகரெட் துண்டுகள் முறையாக அப்புறப்படுத்தப்படுவதில்லை. இதன்மூலம் 766,500 டன் நச்சுக் கழிவுகள் உருவாகி, வேதிப்பொருள்கள் ஆயிரக் கணக்கில் காற்றிலும் நீரிலும் நிலத்திலும் கலக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!