இந்துக்களால் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகைகளில் தெலுங்கு வருடப்பிறப்பான உகாதியும் ஒன்று. புதிய காரியங்கள் தொடங்க உகந்த நாளாகக் கரு தப்படும் இத்திருநாளை இந்தியாவில் மட்டுமன்றி உலகெங்கும்வாழ் இந்தியர்களும் கோலாகலமாக இன்று கொண்டாடுகின்றனர்.
படைப்புக் கடவுளான பிரம்மன் பங்குனி மாத அமாவாசைக்கு அடுத்தநாளான பிரதமையில்தான் புது யுகத்தை படைத்தாராம். அதனால், யுகம்+ ஆதி=யுகாதி அல்லது உகாதி என அழைக்கப்படுகிறது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவில் உகாதி எனவும் மகாராஷ்டிரா, கோவாவில் குடி பத்வா எனும் பெயரிலும் இப்புத்தாண்டை மக்கள் கொண்டாடுகிறார்கள்.
மணிப்பூரில் 'சாஜிபு நொங்மா பன்பா' எனவும் சிந்து இனமக்கள் 'சேட்டி சந்த்' எனவும் கொண்டாடி மகிழ்கின்றனர்.
வீடுகளை மாவிலைகளால் அலங்கரிப்பதன் மூலம் விழாக்கள் தொடங்குகின்றன. ரங்கோலிகள் போடப்படுகின்றன.
உகாதி பண்டிகை நாளில் அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து நீராடி, புத்தாடை உடுத்தி தங்கள் அன்புக்குரியவர்களைச் சந்தித்து வாழ்த்துகின்றனர்; வாழ்த்து பெறுகின்றனர்.
ஒரு கூடல் பண்டிகையாகக் கொண்டாடப்படும் இந்நாளில், புளியோதரை, பால் பாயாசம், தித்திப்பு போளி, தனிச்சிறப்பு மிக்க பச்சடியுடன் படைத்து ஏழு இராகங்களில் பாடி இறைவழிபாடு நடத்துவர்.
இந்நாளில் தொடங்கப்படும் காரியங்கள் பெரிய அளவில் வளர்ச்சியைக் கொடுக்கும் என்பதால், ஏராளமானோர் இந்நாளில் புதிய தொழில்களைத் தொடங்க ஆர்வம் காட்டுகின்றனர். வீடு, மனை, தொழில் சார்ந்த பணிகளுக்கு இந்நாளில் அச்சாரம் போடப்படுகிறது, அடிக்கல் நாட்டப்படுகிறது. நல்ல நேரம் பார்க்கவேண்டிய தேவையில்லை என்பதால், இந்நாளில் திருமணங்களும் இடம்பெறுகின்றன.
வாழ்க்கை என்பது இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி என அனைத்தும் கலந்த கலவை. இதனை எதிர்கொள்ள பொறுமை, சகிப்புத்தன்மை அவசியம் எனும் தத்துவத்தை உணர்த்துவதற்காகவே உகாதி நாளில் ஒரு வித்தியாசமான பச்சடியை தயாரித்து சுவைக்கின்றனர்.
வேப்பம்பூ, மாவடு, புளி, வெல்லம், மிளகாய், உப்பு ஆகியவற்றைக் கொண்டு பச்சடி தயாரிக்கப்படுகிறது. இதில் கசப்பு, புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு, காரம், உப்பு என அறுசுவை கலந்து இருப்பதுபோல் இன்பம், துன்பம், ஏமாற்றம், விரக்தி, தோல்வி, வெறுமை எல்லாம் சேர்ந்திருப்பதே வாழ்க்கை எனும் தத்துவம் உணர்த்தப்படுகிறது. இப்பச்சடியை கன்னட மொழியில் 'பேவு பெல்லா' என்கின்றனர்.