இசை, நடன, ஓவியக் கலை
களின் பிரம்மாண்ட கொண்டாட்டமாக உருவாகியுள்ளது இவ்வாண்டு சிங்கப்பூர் நுண்கலைக் கழகம் (சிஃபாஸ்) ஏற்பாடு செய்துள்ள கலைவிழா. 19வது முறையாக இடம்பெறும் இவ்விழாவில் ஏறத்தாழ 34 கலை நிகழ்வுகள் மக்களை வரவேற்க உள்ளன.
'கல்பனா - கடந்த காலத்தை நினைவுகூர்வது, எதிர்காலத்தைக் கற்பனை செய்வது' எனும் தலைப்பு கொண்டுள்ள இவ்விழா, மாணவர்கள், புகழ்பெற்ற விருதுபெற்ற உள்ளூர், வெளியூர் கலைஞர்கள் என மொத்தம் 160 பேருக்கு தளம் அமைத்துக் கொடுத்துள்ளது.
வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 20) தொடங்கி பன்னிரண்டு நாள்கள் நீடிக்கும் இவ்வாண்டின் கலை விழாவில் முத்தாய்ப்பாக 'கதம்பம்', 'ஜெய ராம்' எனும் படைப்புகள் உள்ளன. எஸ்பிளனேட் அரங்கத்துடன் இணைந்து வழங்கப்படும் இவை, தனித்
துவம் வாய்ந்தவையாக இருக்கும்.
கர்நாடக சங்கீதத்துடன், மேற்கத்திய இசை, சுஃபி இசை, மின்னிலக்க இசை முதலியவை சங்கமிக்கும் கலவை, கான படைப்பாக, 'கதம்பம்' என்ற தலைப்புக்கு ஏற்றவாறு அமைய இருக்கிறது.
இந்திய, சீன, மேற்கத்திய கலைஞர்கள் உள்ளிட்ட 14 இசைக் கலைஞர்கள் இந்த பல்லின படைப்பை முன்னெடுப்பர்.
விருதுபெற்ற ஒடிசி கலைஞர் டத்தோ ராம்லி இப்ராகிம், குரு கஜேந்திரகுமார் பாண்டா ஆகியோரின் இயக்கத்தில் உரு
வெடுத்துள்ள 'ஜெய ராம்', ரசிகர்களை புது விதத்திலான ஒடிசி பாணிக்கு எஸ்பிளனேட் தியேட்டர் அறிமுகப்படுத்தும்.
ராமாயணத்தை வேறுபட்ட கோணங்களில் மக்கள் கண்டு
களிக்க இது வாய்ப்பளிக்கும். திரு இப்ராகிமின் 'சூத்திரா' அமைப்பைச் சேர்ந்த நடனமணிகள் இதனை படைக்க இருக்கின்றனர்.
"மலேசியாவைக் காட்டிலும் சிங்கப்பூரில் நடனக் கலைக்கு ஆதரவும் கலைஞர்களுக்கு ஏற்ற வாய்ப்புகளும் செழுமையாக உள்ளன. ஒடிசி நடனத்தில் கூடுதல் பாணிகளை அறிமுகப்படுத்துவதற்கு ஜெய ராம் போன்ற படைப்புகள் உதவலாம்," என்று கூறியதோடு, சிஃபாஸின் இம்முயற்சியைப் பாராட்டினார் திரு இப்ராகிம்.
சிங்கப்பூரில் இந்திய கலை
களின் மேம்பாட்டில் தொடர்ந்து பங்கு வகிக்க விழையும் சிஃபாஸ், எல்லா சமூக பிரிவினருக்கும் கலை எட்டக்கூடிய அளவில் இருக்கும் என்று உறுதி அளித்தது. மேல் விவரங்களுக்கு: https://www.sifas.org/festival-of-arts2023.html
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் ஆடப்படும் நடனம் ஒடிசி. இந்த நடனமணி ஒடிசி நடனத்திற்கு பாவனை செய்கிறார்.

