உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வில் தற்போது உணவில்தான் அதிக மாற்றம் உண்டாகியுள்ளது. அன்றாட உணவில் அரிசி, கோதுமை உணவுகளைத் தாண்டி சிறு தானியங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
வரகு அரிசி சிறுதானியங்களைப் போன்று சிறிய விதை பகுதியாகும். பொதுவாக அரிசி வகைகளை தீட்டும்போது அதில் இருக்கும் 'பி காம்ப்ளக்ஸ்' பெருமளவு வெளியேறிவிடும். அதனால் நமக்கு அரிசியில் இருந்து அதிக அளவு மாவுச்சத்து மட்டுமே கிடைக்கும். இந்த மாவுச்சத்துதான் பின்னர் கொழுப்பாக உடலில் இதயத்தைப் பாதிக்க செய்கிறது.
வரகு அரிசியில் இந்த மாவுச்சத்து குறைவாக இருக்கும் என்பதால் இதை அரிசி உணவுக்கு மாற்றாக எடுத்துக்கொள்ளலாம்.
மூளை செல்களின் பணிகள் சுறுசுறுப்பாக செயல்படவும் தசைகள், எலும்பு மஜ்ஜை, பல் எனாமல் போன்றவற்றைக் காக்கவும் அமினோ அமிலங்களின் பங்கு அவசியம் தேவை.
அமினோ அமிலங்களில் மொத்தம் 12ல் 11 அமினோ அமிலங்கள் வரகில் உள்ளது. உடலுக்கு தேவையான புரதமானது எப்போதும் தானியங்களுடன் பருப்பு வகைகள் சேர்த்து எடுத்துக்கொள்ளும்போது தான் புரதம் முழுமையாக இருக்கும்.
அந்த புரதம் அமிலத்தன்மையோடு இருக்கும்போது அதில் இருக்கும் நஞ்சை வெளியேற்ற உடல் வேலைசெய்ய வேண்டும். இதிலிருக்கும் சத்து ரத்தம் உறிஞ்சும் பணியை செய்ய அவை காரத்தன்மையாக மாற்றவும் வேண்டும். இந்த பணி உடலுக்கு கூடுதல் சிரமத்தை அளிக்கக்கூடும்.
சிறுதானியங்கள் காரத்தன்மை வாய்ந்தது என்பதால் இவை செரிமானக் கோளாறுகளைக் உண்டாக்காது. எளிதாக செரிமானம் ஆகும்.
வரகில் இருக்கும் புரதம் நல்ல புரதம் என்று சொல்லலாம். உயிர்ச்சத்துக்கள் நிறைந்தவை என்பதால் குழந்தைகளுக்கு ஆறுமாத காலத்துக்கு பிறகு கஞ்சி கொடுக்கும்போது வரகு கஞ்சியை சேர்க்
கலாம்.
பலவீனமான பெண்கள் மாத
விடாய் காலங்களிலும் மெனோபாஸ் காலங்களிலும் மூட்டுவலி உபாதைக்கு ஆளாகக்கூடும். பெண்களுக்கு பலம் கொடுத்து வலி உபாதையை தடுக்கும் தன்மை வரகுக்கு உண்டு.
வரகில் இருக்கும் புரதம் நல்ல புரதம் என்பதால் இது சிறுநீரகத்தில் அதிக நச்சு சேராமல் தடுக்கிறது. இதனால் சிறுநீரக கற்கள் போன்றவை தடுக்கப்படுகிறது. சிறுநீரகங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதால் உடலில் இருக்கும் ரத்தத்தில் இருக்கும் நச்சுநீர் முழுமையும் வெளியேற்றி சிறுநீர் பெருக்கியாக செயல்படுகிறது.
நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குணங்களும் வரகில் அதிகம் இருப்பதால் உடல் எடை குறைய வரகு உணவு நல்ல தீர்வாக இருக்கும்.
தினசரி எடுக்காமல் வாரத்துக்கு மூன்று நாள் வரை வரகு அரிசியை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

