வாசிப்பு விழாவில் ஜெயமோகன், அகரமுதல்வன்

கரு­ணா­நிதி துர்கா

தேசிய வாசிப்பு இயக்­கத்­தின் கீழ் ஏற்­பாடு செய்­யப்­படும் வாசிப்பு விழா ஜூன் 23ஆம் தேதி முதல் ஜூலை 16ஆம் தேதி வரை நடை­பெற உள்­ளது.

சிங்­கப்­பூ­ரில் வாசிப்­புப் பழக்­கத்தை மேம்­ப­டுத்­தும் நோக்­கத்­து­டன் புதிய இணை­யச் செயல் திட்­டங்­கள், நூல் பரிந்­து­ரை­கள் முத­லான பல­வற்­றோடு இந்த ஆண்டு வாசிப்பு விழா ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.

மாற்­றங்­க­ளுக்கு மத்­தி­யி­லும் ஏற்­றங்­க­ளைப் பெற்­றுச் செழிப்­ப­தற்­கான வழி­மு­றை­கள் (Flourish) என்ற கருப்­பொ­ரு­ளு­டன் 70க்கும் மேற்­பட்ட நிகழ்ச்­சி­கள் ஆங்­கி­லம், தமிழ், சீனம், மலாய் ஆகிய நான்கு அதி­கா­ரத்­துவ மொழிகளி­லும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன.

இந்­தக் கருப்­பொ­ரு­ளையொட்டி 12 தலைப்­பு­களில் 12 நூல்­கள் இந்த ஆண்டு வாசிப்பு விழா­வுக்கு தேர்வு செய்­யப்­பட்­டுள்­ளன.

தமி­ழின் முதன்மை எழுத்­தா­ளர்­களில் ஒரு­வ­ரான ஜெய­மோ­க­னின் ‘அறம்: உண்மை மனி­தர்­களின் கதை­கள்’, வழக்­க­றி­ஞர் சுமதி எழு­திய ‘ரௌத்­தி­ரம் பழகு’ ஆகிய இரு தமிழ் நூல்­களும் அவற்­றில் அடங்­கும். உண்மை மனி­தர்­க­ளின் கதை­க­ளைத் தழுவிய அறம் தொகுப்­பின் சிறு­க­தை­கள் அனைத்­துமே அறம் என்ற மையப்­புள்­ளி­யைச் சுற்­றிச் சுழல்­பவை.

தமிழ் வார இத­ழான துக்­ளக்­கில் வெளி­யான வழக்­க­றி­ஞர் சும­தி­யின் கட்டுரை­க­ளின் தொகுப்பு ரௌத்­தி­ரம் பழகு. இந்­நூ­லிலுள்ள கட்­டு­ரை­கள் பெரும்­பா­லும் பெண்­க­ளின் போராட்­டங்­களை முன்­னி­லைப்­ப­டுத்­து­கின்­றன. சமூ­கப் பிரச்­சி­னை­களை எடுத்­து­ரைப்­ப­தோடு, சில வேளை­களில் தீர்வு­க­ளை­யும் நூலில் பரிந்­து­ரைக்­கி­றார் சுமதி.

வாசிப்பு விழா தமிழ் நிகழ்ச்­சி­களில் தமி­ழக எழுத்­தா­ளர்­கள் ஜெய­மோ­கன், சுனில் கிருஷ்­ணன், இலங்கை எழுத்­தா­ளர் அக­ர­மு­தல்­வன், உள்­ளூர் எழுத்­தா­ளர்­கள் ஹேம­லதா, அழ­கு­நிலா ஆகி­யோ­ரு­டன் வழக்­க­றி­ஞர்­களான தமி­ழ­கத்­தின் சுமதி, சிங்கப்­பூ­ரின் வடி­வ­ழ­கன், ஸ்ரீநி­வா­சன் லலிதா ஆகி­யோர் பங்கேற்­கின்­ற­னர். விழா­வில் மொத்­தம் 12 தமிழ் நிகழ்ச்­சி­கள் இடம்­பெ­று­கின்­றன.

மாற்­றத்­தி­லும் ஏற்­றம் பெற்று செழிப்­ப­தற்­கான வழி­யைக் கண்ட­றிய வழி­காட்­டும் வகை­யில் உரை­கள், பயி­ல­ரங்கு, கலந்­து­ரை­யா­டல்­கள் போன்ற பல்­வேறு நிகழ்ச்­சி­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளன. 

தமிழ் நிகழ்ச்­சி­கள்

 எழுத்­தா­ளர் ஜெய­மோ­க­னின் சிறப்­புரை - அறம் நூலின் உண்­மைக் கதை­க­ளைப் பற்­றி­யும் அதன் பின்­ன­ணி­யில் உள்ள உண்­மை­யான மனி­தர்­க­ளைக் குறித்­தும் அவர் உரை­யாற்­று­வார்,

இந்­தக் கதை­களை எழுத அவ­ரைத் தூண்­டி­யது எது, அவை மக்­க­ளி­டத்­தி­லும் சமூ­கத்­தி­லும் ஏற்­ப­டுத்­திய தாக்­கம் என்ன, இக்­க­தை­கள் வாச­கர்­க­ளுக்கு எவ்­வாறு பய­ன­ளிக்­கும், நிஜ வாழ்க்­கை­யில் அவர்­களை எப்­படி ஊக்­கு­விக்­கும் என்­ப­தை­யும் அவர் பகிர்ந்­து­கொள்­வார்.

ஜூன் 24ஆம் தேதி, சனிக்­கிழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இணை­யம் வழி இந்த ­நி­கழ்ச்சி நடை­பெ­றும்.

 எழுத்­தா­ளர் அக­ர­மு­தல்­வன் ‘உண்மை மனி­தர்­க­ளின் கதை’ எனும் தலைப்­பில் ஜூன் 25ஆம் தேதி, ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 5.30 முதல் இரவு 7 மணி வரை ஸூமில் உரை­யாற்­று­கி­றார்.

 ஜூலை 1ஆம் தேதி நடை­பெறும் தமிழ் மேடை நகைச்­சுவை எனும் நிகழ்ச்­சியை ‘ரவா உப்­புமா’ குழு­வின் இரா­ஜேஸ்­கு­மார் தர்­ம­லிங்­கம், பரந்­தா­மன் சந்­தோஷ் குமார் ஆகி­யோர் படைக்­கின்­றனர். உட்­லண்ட்ஸ் வட்­டார நூலத்­தில் மாலை 5.30 முதல் இரவு 8 மணி வரை இந்­நி­கழ்ச்சி நடை­பெறும்.

 கதை எழு­து­வ­தைப் பற்­றிய பல கேள்­வி­க­ளுக்கு ஜூலை 1ஆம் தேதி நடக்­க­வி­ருக்­கும் ‘உண்­மை­யும் படைப்­பும்’ என்ற பயி­ல­ரங்­கில் எழுத்­தா­ளர் அழ­கு­நிலா விளக்­கு­வார். பயி­ல­ரங்கு தேசிய நூல­கம், 5வது மாடி­யிலுள்ள இமா­ஜி­னே­ஷன் அறை­யில் பிற்­ப­கல் 2 மணி முதல் 4 மணி வரை நடை­பெ­றும்.

 ‘அறம் செய்ய விரும்பு: ஒரு கதை சொல்­லு­தல், படைப்­பாற்­றல் போட்டி’ நிகழ்ச்சி ஜூலை 2ஆம் தேதி நடக்­கும். இந்­தப் போட்­டி­யில் பெற்­றோர்­களும் சிறு­வர்­களும் கலந்­து­கொள்­ள­லாம்.

ஆசி­ரி­யர் ஜெய­மோ­க­னின் அறம் நூலில் இருந்து பெற்­றோர்­கள் கதை சொல்­லு­வார்­கள். குழந்­தை­கள் நூலில் உள்ள கதை­களில் ஒன்றை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு புத்­தக அட்டைகளை உரு­வாக்­கு­வார்­கள்.

தேசிய நூல­கம், 16வது மாடி­யி­லுள்ள தி பாட்­டில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை இந்த நிகழ்ச்சி நடை­பெ­றும்.

 ஜெய­மோ­க­னின் ‘அறம்’ சிறு­கதை­கள் குறித்து எழுத்­தா­ளர் சுனில் கிருஷ்­ண­னு­ட­னான உரை­யா­டல் ஜூலை 10ஆம் தேதி மாலை 6 மணி முதல் இரவு மணி­ வரை ஸூமில் நடக்­கும்.

 ‘அறம்: உண்மை மனி­தர்­க­ளின் கதை­கள்’ எனும் தலைப்­பில் எழுத்­தா­ளர் ஹேம­ல­தா­வு­ட­னான கலந்­து­ரை­யா­டல் அங்­கம் ஜூலை 8ஆம் தேதி, தேசிய நூல­கம், 1ஆம் மாடி, விசிட்­டர்ஸ் பிரீ­ஃபிங் அறை­யில், சனிக்­கி­ழமை பிற்­ப­கல் 2 மணி முதல் 4 மணி வரை­யில் நடைபெ­றும்.

 ‘ரௌத்­தி­ரம் பழகு’ நூலா­சி­ரியர் வழக்­க­றி­ஞர் சும­தி­யின் சிறப்புரை, ஜூலை 8ஆம் தேதி சனிக்­கி­ழமை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி ­வரை ஸூமில் நடக்­கும்.

 வழக்­க­றி­ஞர் திரு­மதி ஸ்ரீனி­வா­சன் லலி­தா­வு­டன் ‘ரௌத்­தி­ரம் பழகு: எழுச்­சி­யூட்­டும் ஓர் அல­சல்’ ஜூலை 9ஆம் தேதி சனிக்­கி­ழமை காலை 10 மணி முதல் 11.30 வரை­யில் தேசிய நூல­கம், 16வது மாடி­யி­லுள்ள தி பாட்­டில் நடக்­கும்.

 ‘நீதி­மன்ற வழக்­கு­கள் தரும் வாழ்க்­கைப் பாடங்­கள்’ என்ற தலைப்­பில் ஜூலை 15ஆம் தேதி, மாலை 6 மணி முதல் இரவு 8­ வரை ஸூமில் நடக்­கும் கலந்துரை ­யா­ட­லில் ‘ரௌத்­தி­ரம் பழகு’ நூலி­லுள்ள சுவா­ரஸ்­ய­மான வழக்­கு­கள் பற்­றி­யும் அவை என்னென்ன வாழ்க்­கைப் பாடங்­களைக் கற்­பிக்கின்ற என்­பது பற்­றி­யும் வழக்­க­றிஞர் சுமதி பகிர்ந்து­கொள்­வார். அவ­ரு­டன் இணைந்து கலந்­து­ரை­யா­டு­கி­றார் வழக்­க­றி­ஞர் வடி­வ­ழ­கன்.

 ‘வெற்­றிக் கொடி­கட்டு! ஒரு இசை கொண்­டாட்­டம்’ நிகழ்ச்சி ஜூலை 16ஆம் தேதி­, தேசிய நூல­கம், 16வது மாடி­யி­லுள்ள தி பாட்­டில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை கண்­ணன் சேஷாத்ரி, இசை­மணி பரசி கல்யாண் ஆகி­யோ­ரால் நடத்­தப்­படு­கிறது.

 விழா­வின் ஒரு நிகழ்ச்­சி­யாக, தமிழ் பட்­டி­மன்­றக் கழ­கத்­தின் ஒத்­து­ழைப்­பு­டன் அஷ்­வின் கணே­சன், ஹரி நேத்ரா வெங்­க­டே­சன், பால­கி­ருஷ்­ணன் ராம­நா­தன், யூசுப் ராவுத்­தர் ரஜித் ஆகி­யோர் பங்­கேற்­கும் ‘நமது சமூ­கத்­தின் பச்­சா­தாப மனப்­பாங்கு’ என்ற தலைப்­பி­லான கருத்­த­ரங்­கம் இடம்­பெ­று­கிறது.

இந்த நிகழ்ச்சி தேசிய நூல­கம், 16வது மாடி­யி­லுள்ள தி பாட்­டில் ஜூலை 8ஆம் தேதி, சனிக்­கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி­ வரை நடை­பெ­றும்.

அனைத்து நிகழ்ச்­சி­க­ளுக்­கும் அனு­மதி இல­வ­சம்.

ஜூரோங் வட்­டார நூல­கம், பொங்­கோல் வட்­டார நூல­கம், தெம்­ப­னிஸ் வட்­டார நூல­கம் உட்­லண்ட்ஸ் சிவிக் சென்­டர் ஆகிய இடங்­களில் நடை­பெ­றும் வாசிப்பு விழா நிகழ்ச்­சி­க­ளி­லும் பங்­கேற்று பயன்­பெ­ற­லாம் 

நிகழ்ச்­சி­க­ளைப் பற்­றிய மேல் விவ­ரங்­க­ளுக்கு https://www.go.gov.sg/readfest23 என்ற இணை­யத்­த­ளத்தை நாட­லாம். 

மேலும், https://go.gov.sg/readfest23progs என்ற இணை­யத்­த­ளத்­தின் மூலம் நிகழ்ச்­சி­களுக்குப் பதிவு செய்­ய­லாம்.

 dhurga@sph.com.sg

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!