திறனாளர்களும் உடற்குறையுள்ளோரும் ஒன்றாய்ப் பங்குபெற்ற பூப்பந்துப் போட்டி

1 mins read
59a35a13-775b-479c-861c-e547fa7bb0f6
மாணவர்களை இணைத்த பூப்பந்துப் போட்டி. - படம்: சால்டைன் குழு

மாணவர்களையும் சிறப்புக் கல்வி விளையாட்டாளர்களையும் ஒன்றிணைக்கும் வகையில் பூப்பந்துப் போட்டி ஒன்றுக்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

‘அன்டிகா’ அறநிறுவனமும், ‘வைஸ் ஆக்டிவ் ஹப்’ விளையாட்டு மையமும் இணைந்து ஏற்பாடு செய்த இந்தப் போட்டி சாதாரண மாணவர்கள், சிறப்பு ஒலிம்பிக்ஸ் விளையாட்டாளர்கள் போன்றோர் தரமான வசதிகளுடன் ஒரே இடத்தில் பயிற்சி செய்வதற்கும் விளையாடுவதற்கும் போட்டியிடுவதற்கும் ஏற்ற சூழலை உருவாக்கின. இந்நிகழ்ச்சியில் 96 உயர்நிலைப் பள்ளி மாணவர்களும், 40 சிறப்பு ஒலிம்பிக்ஸ் விளையாட்டாளர்களும் பங்கேற்றனர்.

விளையாட்டு அங்கமானது இருவேறு தனித்தனி நிகழ்ச்சிகள் ஒன்றுக்கொன்று பக்கத்தில் நடப்பது போல் உணரப்படவில்லை. மாணவர்கள் சிறப்புத் தேவை உள்ள விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

தன்னார்வலர்கள் வீரர்களுக்கு ஆயத்தப் பயிற்சிகள், போட்டிகள் மூலம் வழிகாட்டினர்.

பயிற்சியாளர்கள் பயிற்சியின் முறைகளை மாற்றி அமைத்ததால் இரு குழுக்களும் தனித்தனியாகப் பிரிந்து செல்லாமல் ஒன்றாக அந்தப் போட்டியில் பங்கேற்க முடிந்தது.

போட்டி முழுவதும் சமூக உண்டியலுடன் இணைந்து நடத்தப்பட்ட நிதித் திரட்டும் முயற்சியானது சிறப்புத் தேவை உள்ள பள்ளிகள், சிறப்பு ஒலிம்பிக்ஸ் சிங்கப்பூர் ஆகியவற்றை ஆதரிப்பதற்காக $60,000க்கு மேல் திரட்டியது.

முன்னாள் அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் நிகழ்ச்சியைச் சிறப்பித்து, விளையாட்டாளர்களுக்கான ஆதரவை வழங்கினார். 

பலருக்கு மேலும் கட்டுப்படியான, சமமான தீர்வுகளை வழங்க சிங்கப்பூரின் மாற்றுத்திறன் விளையாட்டு முதன்மைத் திட்டம், லட்சிய இலக்குகளை வகுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்