வாழியவே

வாழியவே

1 mins read
99ac7e6a-7586-40fc-870b-2d9748b83089
-
Google News Preferred Icon

சிங்கநகரம் எனப் போற்றப்படும் நாடே!

வளமிக்க சிங்கை பெருமைமிகு வீடே!

தூய மனத்தோடு ஒன்றிணைந்து வாழும்,

பாயும் அன்பால் நல்வாழ்வு எழும்!

தொன்மைப் புகழ்கொண்ட சிங்கப்பூர் மண்ணே,

நன்மை கொழிக்கும் நன்னாளில் கண்ணே!

வானத் தொடுவானின் உச்சியினைத் தொட்டு,

தானே உயர்ந்து நிற்குமொரு பட்டு!

பல்வேறு இன மக்கள் தோளோடு தோளாய்,

அல்லல் நீக்கி வாழும் அழகுக்கே வேளாய்!

எண்ணற்ற சாதனை எந்நாளும் செய்து,

திண்ணற்ற ஆற்றலால் முன்னணி நெய்து!

தேசிய நன்னாளில் வாழ்த்துகள் கூறி,

பாசியில்லா நெஞ்சின் அன்பினூற்று ஊறி!

சிங்கப்பூர் நாடு வாழியவே என்று,

மங்காத புகழோடு தழைக்கட்டும் இன்று!

- டி.என்.இமாஜான்

குறிப்புச் சொற்கள்
இமாஜான்தேசிய நாள் கவிதைகள்தேசிய தினம் 2026

தொடர்புடைய செய்திகள்