நிதானத்துடன் சிந்தித்துச் செயல்பட உதவும் செயலி

நிதானத்துடன் சிந்தித்துச் செயல்பட உதவும் செயலி

1 mins read
7c7715a0-3d9b-44e4-8dad-f441ad0e9e3e
நீல நிற பூதத்திற்குச் சிந்திக்கவும் செயல்படவும் வழிகாட்டும் விளையாட்டு. - படம்: செசமி ஸ்திரீட்

படிப்பு, விளையாட்டு, இணைப்பாட வகுப்புகள் எனப் பல்வேறு நடவடிக்கைகளில் இக்காலத்து மாணவர்கள் ஈடுபடுகின்றனர். 

வேகமாக இயங்கும் வாழ்க்கையில் நமது மனத்தை அமைதியாக வைத்துகொள்ள உதவுகிறது ‘செசமி ஸ்திரீட்’ எனும் புதிய செயலி.

அதில், நீல நிற பூதம் ஒன்றுக்கு நீங்கள் சிந்திக்கவும் செயல்படவும் வழிகாட்ட வேண்டும்.

பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்கொள்ளும் அந்தப் பூதத்திற்கு நீங்கள் மூன்று படிநிலைகளைக் கொண்டு வழிகாட்டலாம். 

நாம் கவலையாகவோ ஆத்திரமாகவோ இருக்கும்போது மூளை அளவுக்கு அதிகமான வேகத்தில் சிந்திக்கும். அதனால், நிதானம் அடையும்வரை மூச்சுவிடுவது நல்லது. 

நிதானம் அடைந்த பின்னர் நன்கு சிந்திக்கலாம் என்பதைக் கூறி பூதத்திற்கு நீங்கள் வழிகாட்ட வேண்டும்.

யோசனைகளில் எது சிறந்தது என்பதை ஆராயவும் சொல்லிக் கொடுக்கலாம். அதன்வழி நீங்களும் அதைக் கற்கலாம்.

சிந்தித்து, நன்கு திட்டமிட்டுச் செயல்பட்டு இந்தப் பூதத்திற்கான வெற்றிகளைத் தேடித் தரலாம்.

இவ்வாறாக, வாழ்க்கைக்குத் தேவைப்படும் படிப்பினைகளையும் கற்கலாம். 

‘Breathe, Think, Do with Sesame’ என்ற செயலியைத் திறன்பேசியில் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.

‘செசமி ஸ்திரீட்’ விளையாட்டில் தெரிவுகள்.  
‘செசமி ஸ்திரீட்’ விளையாட்டில் தெரிவுகள்.   - படம்: செசமி ஸ்திரீட்
குறிப்புச் சொற்கள்