கிறிஸ்துமஸ் கிராமத்தில் ஏழு மீட்டர் சறுக்குப் பலகை

கிறிஸ்துமஸ் கிராமத்தில் ஏழு மீட்டர் சறுக்குப் பலகை

படம்: த போட்டோகிராப்

30 Nov 2026 - 6:43 am

2 mins read

பிரமிக்கவைக்கும் 70,000 சதுர அடிப் பரப்பளவில் ‘கிறிஸ்துமஸ் டுகெதர் 2026’ கொண்டாட்டக் கிராமம் அமைக்கப்பட்டது. இங்கு 7 மீட்டர் உயர உள்ளரங்கச் சறுக்குப் பலகை முக்கிய ஈர்ப்பாக அமைந்துள்ளது. 20 தனித்துவமான கலைக் கரடிப் பொம்மைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டன. பயன்படுத்தப்பட்ட பான கலன்களால் உருவாக்கப்பட்ட பெரிய கிறிஸ்துமஸ் மரமும் இங்கு இடம்பெற்றது. வழக்கமான பண்டிகை காலக் கடைத்தொகுதிகளைத் தாண்டி, 18 சிறப்பு அனுபவங்கள், 150 வணிகப் பெயர்கள், 50 நேரடி நிகழ்ச்சிகள் இதில் ஒருங்கிணைக்கப்பட்டன.

18 சிறப்பு அனுபவங்கள், 150 வணிகங்கள், 50 நேரடி நிகழ்ச்சிகள் ஆகியவை   ‘கிறிஸ்துமஸ் டுகெதர் 2026’ ஒருங்கிணைக்கப்பட்டன.
18 சிறப்பு அனுபவங்கள், 150 வணிகங்கள், 50 நேரடி நிகழ்ச்சிகள் ஆகியவை  ‘கிறிஸ்துமஸ் டுகெதர் 2026’ ஒருங்கிணைக்கப்பட்டன. - படம்: த போட்டோகிராப்

விறுவிறுப்பான மகிழ்ச்சியுடன் சிங்கப்பூர் மரபுடைமை, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை, அறப்பணி ஆகியவற்றை இணைக்கும் வகையில் ஏற்பாட்டாளர்கள் இதனை வடிவமைத்துள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் வருமானம், பாதிக்கப்படக்கூடிய பிள்ளைகளுக்கு ஆதரவளிக்கும் சிங்கப்பூர்ச் செஞ்சிலுவைச் சங்கத்தின் ‘யங் ஹார்ட்ஸ்’ திட்டத்திற்கு வழங்கப்படும். விளையாட்டுப் பிரியர்களுக்காக ‘தி வில்லேஜ் கார்னிவல்’ பகுதியில் ‘அங்கிள் ரிங்கோ’ நிறுவனத்தின் பாரம்பரிய விளையாட்டுகளும் ‘பார்க்லேப்’ அமைப்பின் பல அடுக்கு விளையாட்டுத் தளமும் அமைக்கப்பட்டன.

உள்ளரங்கப் பிக்கிள்பால் திடல்கள், கைவினைப் பயிலரங்குகள், நேரடி இசைத் தொகுப்பாளரின் (டிஜே) நிகழ்ச்சியும் நடைபெற்றன. சிங்கப்பூரின் மரபுடைமைக் கடைவீடுகளை அடிப்படையாகக் கொண்ட ‘கிறிஸ்துமஸ் ஷாப்ஹவுஸ் சர்ப்ரைஸ்’ எனும் 16 கதவுகள் கொண்ட பிரம்மாண்ட நாள்காட்டியில் 20 வெள்ளி செலுத்தி ரகசியப் பரிசுகள் வழங்கப்பட்டன.

உள்ளரங்கப் பிக்கிள்பால் திடல்கள், கைவினைப் பயிலரங்குகள், நேரடி இசைத் தொகுப்பாளரின் (டிஜே) நிகழ்ச்சியும் நடைபெற்றன.
உள்ளரங்கப் பிக்கிள்பால் திடல்கள், கைவினைப் பயிலரங்குகள், நேரடி இசைத் தொகுப்பாளரின் (டிஜே) நிகழ்ச்சியும் நடைபெற்றன. - படம்: த போட்டோகிராப்

அந்த முழுத் தொகையும் அறப்பணிக்குக் கொடுக்கப்பட்டன. ‘கைண்ட்னஸ் பியர் ஹவுஸ்’ கண்காட்சிக்காகச் சேகரிப்பாளரும் வடிவமைப்பாளருமான ஜியான் யாங் உருவாக்கிய 20 கலைக் கரடிப் பொம்மைகளும் ஏலம் மூலம் அறப்பணிக்காக விற்கப்பட்டன. சுற்றுச்சூழல் நிலைத்தன்மைப் பகுதியில் மறுபயனீட்டு ‘டெட்ரா பேக்’ அட்டைப்பெட்டிகளால் ஆன கிறிஸ்துமஸ் மரம், ‘குளூப்’ நிறுவனத்தின் துணி மறுபயனீட்டு நடவடிக்கைகள், மண்டாய் வனவிலங்குப் பாதுகாப்புக் கண்காட்சிகள் இடம்பெற்றன.

‘கிறிஸ்துமஸ் குக்கி கோம்பி’ எனும் பழைய ‘கோம்பி’ வாகனத்தில் செயல்படும் ‘மஞ்சள் நாடா அடுமனை’ மூலம் புதிதாகச் சுடப்பட்ட பிஸ்கட்டுகள் வழங்கப்பட்டன. கைதிகளும் முன்னாள் குற்றவாளிகளும் சமையற்கலைத் திறன்களைப் பெற்று சமூகத்தில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்த இத்திட்டம் உதவியது.

படம்: த போட்டோகிராப்
7 மீட்டர் உயர உள்ளரங்கச் சறுக்குப் பலகை.
7 மீட்டர் உயர உள்ளரங்கச் சறுக்குப் பலகை. - படம்: த போட்டோகிராப்
குறிப்புச் சொற்கள்