வண்ணங்கள் நிறைந்த இலையுதிர் கால விழா

வண்ணங்கள் நிறைந்த இலையுதிர் கால விழா

படம்: மக்கள் கழகம்

28 Sep 2026 - 8:24 am

1 mins read

சீனப் பாரம்பரியத்தில் மிக முக்கிய இடம் வகிக்கும் ‘இலையுதிர் கால விழா’ (Mid-Autumn Festival), இப்போது சிங்கப்பூர் தீவு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

நமது அக்கம் பக்கத்து குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி கைவினைப் பொருள்களைச் செய்து மகிழ்வதுடன், சிறப்பான கலை நிகழ்ச்சிகளையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

மீன் வடிவிலான கூண்டுவிளக்கு.
மீன் வடிவிலான கூண்டுவிளக்கு. - படம்: மக்கள் கழகம்

இரவு நேரமானதும் விதவிதமான வண்ணக் கூண்டுவிளக்குகளைக் கைகளில் ஏந்தியபடி குதூகலமாக குடியிருப்பாளர்கள் உலா வருகிறார்கள்.

அட்மிரால்ட்டி வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, மீன் வடிவில் ஒரு பிரம்மாண்டக் கூண்டுவிளக்கை உருவாக்கி எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளனர்.

தாமான் ஜூரோங் வட்டாரத்தில் கைவினைப் பொருள்களைச் செய்து மகிழும் சிறார்.
தாமான் ஜூரோங் வட்டாரத்தில் கைவினைப் பொருள்களைச் செய்து மகிழும் சிறார். - படம்: மக்கள் கழகம்

மீன் வடிவில் உள்ள அந்தக் கூண்டுவிளக்கின் நீளம் 2.8 மீட்டர், அகலம் 1.5 மீட்டர், உயரம் 2.2 மீட்டர்.

பழங்காலத்தில் அட்மிரால்ட்டி பகுதி ஒரு மீன்பிடிக் கிராமமாகத் திகழ்ந்ததை இந்த மீன் வடிவ விளக்கு அழகுற நினைவூட்டுகிறது.

மூங்கில், பிரம்புகளால் பின்னப்பட்ட இந்த பிரம்மாண்ட விளக்கு, பல வண்ணத் துணிகளாலும் 200 மின்விளக்குத் தகடுகளாலும் போர்த்தப்பட்டுப் பளபளப்பாகக் காட்சியளிக்கிறது.

இந்தக் கொண்டாட்டங்கள் விழாக்கால அழகை மட்டுமன்றி, அனைவரும் ஒன்றுகூடி இணைந்து செயல்படும் சமூக ஒற்றுமையையும் அழகாக வெளிக்காட்டுகின்றன!

குறிப்புச் சொற்கள்
சீனம்பாரம்பரியம்கலைகைவினை

தொடர்புடைய செய்திகள்