தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இம்மாதம் 26ம் தேதி செந்தோசா 'அண்டர் வாட்டர் வோர்ல்ட் சிங்கப்பூர்' மூடப்படுகிறது

1 mins read
whatsapp
facebook
x
copylink
871298a8-fec8-48d8-bceb-262e336c8cbd
-

இன்னும் இரண்டு ஆண்டுகளில் குத்தகைக் காலம் முடிவடைய இருப்பதால் செந்தோசாவில் செயல்பட்டு வரும் 'அண்டர் வாட்டர் வேர்ல்ட் சிங்கப்பூர்' இம் மாதம் 26ஆம் தேதி தன் கதவு களை மூடவிருப்பதாக நேற்று அறிவிக்கப்பட்டது. அருகி வரும் கடல்வாழ் உயி ரினங்களான இளஞ்சிவப்பு டால் பின்கள், நீர் நாய் போன்றவை சீனாவில் உள்ள 'சைம்லாங் ஓஷன் கிங்டத்திற்கு' மாற்றப்பட விருப்பதாக இதனை நிர்வகித்து வரும் 'ஹாவ் பார்' நிறுவனம் தெரிவித்தது.

கடந்த ஓராண்டாக இவற்றுக் கான பொருத்தமான வசதிகள் குறித்து பரிசீலனை செய்து, சிங் கப்பூர், சீன அதிகாரிகளின் ஒப்பு தலுக்கு பிறகே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ஹாவ் பார் நிறுவனத்தின் பேச்சாளர் கூறி னார். பழைய குடும்ப நினைவுகளை மீண்டும் மீட்டெடுக்கும் வகையில் 1991ஆம் ஆண்டு அது திறக்கப் பட்ட பிறகு வழங்கிய பெரியவர் களுக்கு $9, சிறுவர்களுக்கு $5 என்ற அறிமுகக் கட்டணத்தையே இன்று முதல் வழங்கவிருப்பதாக ஹாவ் பார் நிறுவனம் கூறியது.

'அண்டர்வாட்டர் வோர்ல்ட் சிங்கப்பூர்' நீர்க் காட்சியகத்தில் உள்ள நீருக்கடிச் சுரங்கத்தில் வருகையாளர்கள் தங்களுக்கு மேலும் பக்கத்திலும் நீந்தும் மீன்களைப் பார்த்து பரவசமடைகின்றனர். கோப்புப் படம்

whatsapp
facebook
x
copylink

அண்மைய காணொளிகள்>