சிங்கப்பூரில் 100 டன் கொள்ளளவு கொண்ட புதிய தங்கப் பெட்டகத்தை ஓசிபிசி வங்கி அமைத்துள்ளது.
தங்க வர்த்தகம், பாதுகாப்புச் சேவைகளுக்கான தேவை அதிகரித்துள்ளதால் ஓசிபிசி வங்கி தனது தங்க வணிகத்தை விரிவுபடுத்தியுள்ளது.
தலா 12.4 கிலோ எடையுள்ள கிட்டத்தட்ட 8,000 பெரிய தங்கக் கட்டிகளைப் புதிய பெட்டகத்தில் பாதுகாக்க முடியும் என வியாழக்கிழமை (நவம்பர் 26) ஓசிபிசி தெரிவித்தது.
நிறுவன வாடிக்கையாளர்களுக்கும் ‘பேங்க் ஆஃப் சிங்கப்பூர்’ தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இச்சேவை வழங்கப்படுகிறது.
தற்போது தனது பாதுகாப்பில் எவ்வளவு தங்கம் உள்ளது என்பதையும் எத்தனை வாடிக்கையாளர்களுக்காகத் தங்கத்தைப் பாதுகாத்து வருகிறது என்பதையும் வெளியிட ஓசிபிசி மறுத்துவிட்டது.
கடந்த ஜூன் மாதம் இச்சேவைத் தொடங்கியது முதல் சிங்கப்பூர் சார்ந்த தங்கத் தீர்வுகளுக்கான தேவை வலுவாக உள்ளதாக ஓசிபிசியின் உலகச் சந்தைப் பிரிவுத் தலைவர் கென்னத் லாய் கூறினார்.
ஆசிய பசிபிக் வட்டாரத்தின் முன்னணித் தங்க வர்த்தக மையமாகச் சிங்கப்பூர் உருவெடுத்து வருகிறது.
சிங்கப்பூர்ப் பங்குச் சந்தை 2027ல் தொடங்கவுள்ள தங்கத் தீர்வுக் கட்டமைப்பில் ஓசிபிசி நிறுவன உறுப்பினராக உள்ளது.
முன்னதாக, வெளிநாட்டு மத்திய வங்கிகள், அனைத்துலக நிதி அமைப்புகளுக்காக 500 டன் கொள்ளளவு கொண்ட தங்கப் பெட்டகச் சேவையைச் சிங்கப்பூர் நாணய ஆணையம் நவம்பர் 10ஆம் தேதி தொடங்கியது.
சில்லறை வாடிக்கையாளர்கள், ஓசிபிசி செயலி வழியாகவும் தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
