பல்வேறு போக்குவரத்துக் குற்றங்களுக்காக துவாஸ் சோதனைச்சாவடியில் 152 மோட்டார் சைக்கிளோட்டிகள் பிடிபட்டனர்.
போக்குவரத்துக் காவல்துறை, தேசிய சுற்றுப்புற வாரியம், நிலப் போக்குவரத்து ஆணையம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 14) இணைந்து நடத்திய சோதனையில் அவர்கள் சிக்கினர்.
துவாஸ் சோதனைச் சாவடியில் 350க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளோட்டிகளிடம் அந்த அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
பிடிபட்டோரில் 30 பேரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. 21 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள் வாகனக் காப்புறுதி இன்றி வாகனம் ஓட்டிய குற்றத்தையும் புரிந்ததாக காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 20) தனது அறிக்கையில் குறிப்பிட்டது.
வாகனங்களில் இருந்து புகை வெளியேறுதல், அதிகப்படியான இரைச்சல் ஆகிய குற்றங்களுக்காக 86 அபராதச் சீட்டுகளை தேசிய சுற்றுப்புற வாரியம் வழங்கியது.
அந்தக் குற்றங்களுக்கு $2,000 வரையிலான அபராதம் விதிக்கப்படக்கூடும்.
இது தவிர, வாகனப் பதிவு எண்ணை வாகனத்தில் முறைப்படி காட்சிப்படுத்தாத குற்றங்களுக்காக 36 அபராதச் சீட்டுகளை நிலப் போக்குவரத்து ஆணையம் பிறப்பித்தது.
அந்தக் குற்றத்திற்கு மூன்று மாதம் வரையிலான சிறை, $1,000 வரையிலான அபராதம் ஆகியன விதிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் குற்றத்திற்கான தண்டனை $10,000 வரை அபராதம், மூன்றாண்டு வரையிலான சிறை.

